பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 45

கட்டுரை ஒரு சொற்பொழிவு எனலாம்.

பேசிய மதுராபதித் தெய்வம் தன்னை கண்ணகியிடம் அறி முகம் செய்துகொள்ளும் போது தன்னைக் கட்டுரையாட்டியேன்' என்று குறிக்கின்றது. இத்தெய்வம் பேசிய இப்பேச்சைச் சாத்த னார் தாமே கேட்டதாகவும் அதனையும் அவரே சொல்வதாக வும் சிலப்பதிகாரத்தின் பதிகத்தில் வருகின்றது. அதனை கூறும் அlெH. -

'கோட்டம் இல் கட்டுரை கேட்டவன்' என்று குறிக்கின்றார்.

ஒரு நல்ல சொற்பொழிவுப் பாங்கில் அமைந்த இந்தப் பகுதி 'கட்டுரை காதை' என்றும், பேசிய தெய்வம் 'கட்டுரை .யாட்டி" என்றும் அப்பேச்சு மற்றுமோர் இடத்தில் கட்டுரை' என்றும் ஒரே சொல்லாய்க் குறிக்கப்படுவதை நோக்கினால் ஒருவர் முன்னிலையையே அவைக் களமாகக் கொண்டு ஆற்றப் பட்ட சொற்பொழிவு இது எனலாம்.

மேலும் சிலப்பதிகாரத்தில் ஒல்வொரு காண்டத்தின் இறுதி யிலும், நூலின் இறுதியிலும் தொகுத்து உரைக்கப்படும் பகுதிகள் "கட்டுரை' என்னும் தலைப்பில் உள. பொருள் பொதிந்த உரை என்னும் கருத்தில் இத்தொகுப்புரைகள் அவ்வாறு குறிக்கப் பட்டன போலும் இப்பகுதிகள் பிற்காலத்தில் எவராலோ எழுதப்பட்டுச் சேர்க்கப்பட்டவையாகப்படுகிறது.

தொல்காப்பியத்தில் கட்டி எழுதப்படும்-உரைக்கப்படும் செய்தி கட்டுரை என்ற சொல்லால் எழுந்து, செல்லச்செல்லக் கட்டுரை என்னும் சொல் கட்டுக்கோப்போடு உரையாற்றுவதை யும், அதன் தொடர்பில் சொற்பொழிவையும் குறிப்பதாக வளர்ந்து, இக்காலத்தில் எழுதப்படுவதையே குறிப்பதாக நிலைத்துள்ளது. -

22. * 3 - காடுகாண் காதை - 151

23, பழமொழி - 262 24. சிலம்பு - கட்டுரை காதை- 23 25. 3 * - பதிகம் - 54