பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்

வாயுணர்வின் மாணவன்:

ஆசிரியர் இல்லம். நண்பகல் நேரம், ஆசிரியர்.உணவு உண்டு அமர்ந்துள்ளார். மாணவனுக்கு உணவு படைக்கப்பட்டது ஆசிரியரது இல்லக் கிழத்தியார் சோறிட்டுப் பருப்பு வைத்துக் கிண்ணத்திலிருந்த நெய்யில் ஒரு கரண்டி இட்டார். மாணவன் பிசைந்து வாயில் வைக்கச் சென்றவன் படக் கென்று நிமிர்ந்:தான். முக்கு மூச்சைத் தள்ளியது; முகம் சுளித்தது.

ஆசிரியர், 'என்ன பையா? என்றார். பையன் வந்த சொல்லை விழுங்கினான். ஆசிரியர். சொல்லவாம்' என்றார். மாணவன் தணிந்த குரவில், 'அம்மா நெய் போடுவதற்குத் தவறி விளக்கெண்ணெயை ஊற்றிவிட்டார்கள்’ என்றான். ஆசிரியர் அம்மையாரைப் பார்த்தார். அம்மையார் புன்முறுவலை அனுப் பினார். ஆசிரியர், வேறு இலை போட்டுச் சோறு, பருப்பிட்டு நெய்யே போடு, என்றார்.

உணவுண்டு முடித்தான் மாணவன். பையா, உலவிவிட்டு வா. வந்து உனது ஏடுகள், உடைகளை எடுத்துக்கொண்டு உன் இல்லத்திற்குச் செல்லலாம். படிப்பு அவ்வளவுதான் என்றார். "ஐயா, மூன்றாண்டுகள் கற்க வேண்டும் என்றீர்களே, ஒராண்டும் முடியவில்லையே' என்றான். ஆமாம்; இதுவரை உனக்குப் படிப்பு ஒன்றில்தான் கவனம் படிந்திருந்தது. வந்த நாள் முதல் இந்த நாள்வரை உனது பருப்புணவுக்கு நெய்யாக விளக்கெண் ணெய்தான் ஊற்றப்பட்டது, கவனமெல்லாம் கல்விச்சுவையிலும் கேள்விச் சுவையிலும் படிந்திருந்ததால் நாச்சுவை GT 5 R7n7 Lost) விளக்கெண்ணெயை உண்டு வந்தாய். இன்று நாச்சுவையில் உன் கவனம் படிந்துவிட்டது. இனிக் கல்வி படியாது: செல்லலாம் என்று முடித்துக் காட்டினார் ஆசிரியர், 3