பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 47

இஃது அந்தக் காலத்துக் கல்விக் கதை. இந்தக் காலத் திற்குச் செல்லுபடியாகாது. ஆசிரியர் இல்லத்தில் மாணவன் தங்கிப் பயில்வது குருகுல முறை எனப்பட்டது. -

இக்கால மாணவரது மனப்போக்கு, பல்கிப் பெருகியுள்ள மாணவர் எண்ணிக்கை,

வளர்ந்துள்ள பலமுனைப் பாடத்துறைகள் முதலியன 'குருகுல முறை” க்கு அப்பாற்பட்டன எனலாம். இசை, கூத்து முதலிய நுண்கலைகளுக்கு வேண் டுமானால் ஓரளவிற்குச் சில காலத்திற்கு இசைந்து லரலாம்.

மேலே காணப்பட்ட மாணவனது கதையில் ஒர் உண்மை மின்னுகின்றது. 'மற்ற எதனிலும் கவனங்கொள்ளாது எடுத்த கல்வியில் ஆழ்ந்த படிவே படிப்பு, என்னும் உண்மையை மறுக்க முடியாது. இவ்வுண்மை எக்காலத்திற்கும் பொருத்தமானதே. தமிழ் இலக்கண நூல்கள் கல்விப் பயிற்சிக்கு இலக்கணங்களை வகுத்துள்ளன.

நீர் வேட்கை கொண்டவன் நீரைக் கண்டால் பருகுவதற்குக் கொள்ளும் ஆர்வம் போன்று கல்வியில் ஆர்வங்கொள்ள வேண்டும். இது பருகுவன் அன்ன ஆர்வத்தன்' எனப்பட்டது. செவி வாயாக நெஞ்சு தொண்டையாகக் கேட்பவற்றை விடாது உள்ளத்தில் அமைக்க வேண்டும். நீர் பருகுவதையும் உணவு உண்பதையும் உவமையாகவும் உருவகமாகவும் எடுத்து வைக்கும் பாங்கில் மற்றொரு கருத்தையும் இலக்கண ஆசிரியர் வைத்துள் ளார். 'நாச்சுவையில் கவனங் கொள்ளக் கூடாது, என்பது அது. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் என்று காக்கும் வள்ளுவர் கருத்தும் இந்நோக்கில் எழுந்ததே. இவை கல்வி ஆர்வத்தைக் குறிப்பவை. - -

'சித்திரப்பாவையின் அத்தகவு அடங்கி' இருந்து கற்க வேண்டும் என்றனர். இது மாணவன் கொள்ளவேண்டிய ஆழ்ந்த கவனத்தை வலியுறுத்துவது. -

SMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAAAA

தன் : 40 :

2. குறள் : 4 20

3. நன். : 40 : 6