பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 5 s

'நல்கேள்வித் துறையோகிய தொல்லாணை நல்லாசிரியர்'

-என மதுரைக் காஞ்சியிலும்" பட்டினப் பாலையிலும்' நல்லாசிரியர் எனக் குறிக்கப்பட்டார். மதுரையாசிரியர் மாறன், ஆசிரியர் நல்லந்துவனார். மதுரை இளம்பால், ஆசிரியன் சேந்தன் கூத்தனார் எனும் புலமைப் பெருமக்கள் ஆசிரியர் அடைமொழி பெற்றமையால்

அன்னாரை ஆசிரியத் தொழில் மேற்கொண்டவராகக் கொள்ளலாம்,

சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தொல் காப்பியரை யாண்டும் "ஆசிரியர்' என்றே குறித்துச் சொல்லுவது இலக்கண ஆசிரியர் என்பதை நினைவு படுத்துகின்றது. மேலும் நூலாசிரியன், உரையாசிரியன், ஆடலாசிரியன், பாடலா சிரியன், யாழாசிரியன், சமயவாசிரியன் எனப் பல துறையிலும் அவ்வக் குற்றம் போக்கும் ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர்.

ஆசிரியன் வேறு; ஆசாரியன் வேறு: ஆசாரியன் என்பான் ஒழுக்கத்தை உணர்த்துபவன். அதன் பகுதி ஆசாரம். அஃதாவது ஒழுக்கம். சமண சமய நூல்கள் பஞ்ச பரமேட்டிகள் என ஐவரைக் குறிப்பிடும். அவ்வைவருள் ஆசாரியார். உபாத் தியாயர் என இருவரும் வேறு வேறாய்க் குறிக்கப்படுவதும்' இதனைத் தெளிவுபடுத்துவதாகும்.

கணக்காயன்

கணக்கு என்றதும் இக்காலத்தில் நம் நினைவில் வருவன "ண்களும் அவற்றின் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக் கலுமே. முற்காலத்தில் கணக்கு என்னும் சொல் நூலை உணர்த்தியது. -

'சுற்றறி எழுத்தும் எண்ணும் கணக்கு எனச் Qar g நாமம்' என்பது சூடாமணி நிகண்டு' தொடக்கத்தில் கணக்கு

12. மதுரை : 760, 761

13. பட் : 169, 170 - 14. சிலம்பு : 1.0 , 19 அரும்பதம்