பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - வளையல்

என்பது எழுத்தையும் எண்ணையும் குறித்தது. தமிழ் எழுத்து வரிசை நெடுங்கணக்கு’ எனப்பட்டது. இந்த நெடுங்கணக்கைப் பயில்வது தொடக்கக் கல்வி. இக்கணக்கைக் கற்போர் புலர்கூடி: குழுவாக ஆயமாகக் (ஆயம்-கூட்டம்) கற்றனர். இக்கூட்டம் கணக்கு + ஆயம் = கணக்காயம் எனப்பட்டது. கணக்காயத் திற்குக் கற்பிப்போனாக அமைந்த ஆசிரியன் கணக்காயன் எனப்பட்டான்.

'கணக்காயர் இல்லாத ஊர் ... ... ... ... ... ... ... .

L L S S S S S S S S S S S S S gg YS S S S S S S S S S S S S S S S S S S S * * * * * * * * * * * * * * * * * {

நன்மை பயத்தல் இல

- என்னும் திரிகடுகப் பாடல்" கணக்காயன் இல்லாத ஊரில் நன்மை விளையாது என்று குறித்தது. இதன் வாயிலாகக் கணக்காயன் ஒவ்வொரு ஊருக்கும் இன்றியமையாதவனாக விளங்கினான் என்பதை உணரலாம்.

கடைச்சங்க நூல்கள், அடி எண்ணிக்கை, அளவு எனும் கணக்குக் கொண்டு தொகுக்கப்பட்டவை. அவை பதினெண்மேல் கணக்கு (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை) எனவும், பதினெண் கீழ்க்கணக்கு எனவும் பெயர் பெற்றன. இவற்றில் கணக்கு என்னும் சொல் நூல் என்னும் பொருள் கொண்டது. எழுத் தையும், எண்ணையும் குறிக்க எழுந்த கணக்கு ஆகுபெயராக நெடுங்கணக்கால் ஆகிய நூலைக் குறிப்பதாயிற்று. எழுத்தை யும் எண்ணையும் கற்பித்த கணக்காயர் எழுத்தாம் இலக்கண இலக்கிய நூல்களையும், எண்ணாம் கணித நூல்களையும் கற்பித்தனர்.

'கணக்காயர் நூலுரைப்போர்’ எனச் சேந்தன் திவாகரம்' முதலிய நிகண்டுகள் கணக்காயர் நூலைக் கற்பித்தவர் என்பதைக் காட்டுகின்றன. -

15. சூடா. 10 : 31 : 1 16. திரிக : 26 , 1-4 17. சேதியா : 2 : 9