பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 57

இம்மூன்று சொற்களும் மற்றொருவகை ஒற்றுமையால் கற்பிக்கும் ஆசிரியன் என்னும் பொருளினின்றும் பிரிந்து அதற் கென ஓர் அடையாளமும் பெற்றுள்ளன.

‘உபாத்தியாயன், மறையை ஒதுவிக்கும் அந்தணன் எனக் கண்டோம். குரு' என்பது குருக்கள் ஆகிக் கோயிற் பூசை செய்வோரைக் குறிப்பதாயிற்று. தேசிகன்- தேசிகர் என்பார் ஒதுபவராகவும் கரணங்களைச் செய்விப்போராகவும் அமைந் தனர். இவ்வாறு மூவரும் இரு பிறப்பாளராகப் பூனூல் அ பவராக ஆசிரியரினின்றும் பிரிந்து நிற்கின்றனர். -

ஒசன் பணிக்கன்

இவை இரண்டும் தமிழ்ச் சொற்களேயாயினும் திசைச் சொற்களாகக் கொடுந்தமிழ் நாட்டிலிருந்து வந்து சேர்ந்தவை

ஒசு, ஒசம் என்னும் சொற்கள் பேரொளி, புகழ் என்னும் பொருள்களைக் கொண்டவை. ஓசு + அன்=ஒசன் ஆகி அறிவில் பேரொளியுடையவன்-புகழுடையவன் என்றும் சிறப்பில் ஆசிரிய னைப் போலத் திகழ்ந்தவனைக் குறித்தது. ஆயினும், காளி கோயிற் பூசாரிக்கும் அப்பெயர் அமைந்ததை நோக்கும்போது இச்சொல்லும் முழுமையாக ஆசிரியனுக்குரிய பொருட்சிறப்பைப் பெற்றதாகக் கொள்ள இயலவில்லை.

'பணிக்கம்’ என்பதற்குத் திருத்தம், என்றொரு பொருள். * தவறுகளைத் திருத்திச் செம்மை செய்பவன் என்னும் கருத்தில் இச்சொல் ஆசிரியனைக் குறிப்பதாயிற்று. கல்வி அறிவால்-கற் பிக்கும் திறத்தால் பணிய வைப்பவன் என்னும் கருத்திலும் ஆசிரி யனை அணுகியிருக்கலாம். இச்சொல் மலைஞாலத்தில் இப் பொருட் குறிப்பில் வழங்கப்படினும் அங்கும் ஒரு காலத்தில் கோயிற் பூசாரிக்கு வழங்கப்பட்டது. கூத்துக்கலையைப் பயிற்று பவனுக்கும், படைக்கலம்பயிற்றுபவனுக்கும் 'பணிக்கன்' என்னும் சொல் வழங்கப்ப்ட்டது.

29. தமிழ் அகராதி : 1 பங். 2458 (லெக்சிகன்)