உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 59

இது சிறப்பு ஆசான் என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. கத்துத் தமிழிலும் 'ஆடற்கு அமைந்த ஆசான்' பெருமை பெற்றவன்.

எனவே, ஆசான் என்னும் சொல் முத்தமிழ் ஏட்டிலும் பொன்னெழுத்துக்களால் ஒலிவிடுகின்றது. ஆசானையும் பொன் னொளிப் புகழில் நிறுத்தியுள்ளது. *

யோகம் எட்டுவகைப்படும். அவற்றுள் நியமம் இரண்டா வது. இது ஐந்தாக விரியும். இவற்றுள் ஐந்தாவது ஆசார்க்கு, அளித்தல்." கற்பித்த ஆசானுக்குக் காணிக்கை வழங்குதல் ஒரு யோகமாகவே அமைந்தது. இவ்வகையில் ஆசான் யோகச் சிறப் பையும் பெறுகிறான்.

ஆனால், பேச்சு வழக்கில் இச்சொல் பெருமளவில் இடம் பெறவில்லை. அருகி வழங்கப்படும்போது அவரது பெருமைக் குக் கட்டளைக் கல்லாக நின்றது; நிற்கின்றது.

அடுத்துக் கணக்காயர் என்னும் சொல் பழங்கால நூல்கள் சிலவற்றில் கற்பிப்பாரது பெருமையைப் பேணிக் காத்தது. எவ் வகையிலும் அவரது பெருமையில் தொய்வை ஏற்படுத்தவில்லை. ஆனால், தற்கால வழக்கில் இச்சொல் கற்பிப்போரை உணர்த் தாமல் வரவு செலவுக்கணக்கை ஆராய்ந்து பார்ப்பவரை - கணக்குத் தணிக்கையாளரை நினைவுபடுத்தும் நிலைக்கு வந் துள்ளது. கல்வி கற்பிப்போரைக் குறிக்கும் வழக்கில் அறவே இல்லை. அதே நேரத்தில் அவரைக் குறைக்கும் நிலையை எவ் வகையிலும் ஏற்படுத்தாதற்கு அச்சொற்கு நன்றி கூற வேண்டும்.

'குரு' என்னும் வடசொல் கல்வி கற்பிப்போரைக் குறிக்கும் நோக்கில் எழவில்லை என்பதைக் கண்டோம். ஆனால். அச் சொல் கற்பிப்போருக்கு வழங்கியுள்ள பெருமை மிகச் சிறப்பாகக் குறிக்கத் தக்கதாகும். மாதா, பிதா, குரு, தெய்வம்' என அவரைத் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் உயர்த்தியது.

33. சிலம்பு 3 3 : 25 34. தொல். பொருள் : 75 தச்சர் மேற்கோள்