பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - 6U að orruggi

தந்தைக்கு ஆசானாகப் பதிப்போடு உணர்த்தாமையால் ' குரு நாதன்' என முருகக் கடவுளை ஒட்டியது.

'குருகுலம்’ என்னும் சொல்லமைப்பு குறிக்கத்தக்க கருத் தைக் கொண்டது. இத்தொடர் குரு' என்னும் அரசனது குலத் தாரைக் குறிப்பதோடு கற்பிப்போர் உடன் உறைந்து பயிலும் கல்வி நிலை அமைப்பையும் குறிப்பதாயிற்று அதற்கு மேலும் ஒருபடி உயர்ந்து நின்றது.

தேவகுலம்' என்னும் சொல்லமைப்பு விரிந்தால் தேவரது கூட்டம் எனப் பொருள்படும். இச்சொல்லமைப்பிற்குத் தெய்வக் கோயில் என்றொரு சிறப்புப் பொருளும் உண்டு.

'ஊரான் ஒர் தேவ குலம்' என்ற இலக்கிய வழக்கும்,

'பாழ்மனையும் தேவ குலமும் சுடுகாடும்' என்னும் ஆசாரக் கோவையும் பிற பல பாடல்களும் தெய்வக் கோவிலைத் தேவ குலம் எனக் காட்டுகின்றன. இவற்றில் குலம்' என்பது கோவில்' என்னும் பொருளைக் கொண்டது. இது போன்றே குருகுலம்' என்பதில் உள்ள ‘குலம்’ என்னும் சொல்லும் கோவில் என்னும் பொருளில் நிற்பதாகும். குருவினது இல்லம் கோவிலாகக் கொள்ளப்பட்ட பெருமையைக் கான் கின்றோம். எழுத்தறிவித்தவன் இறைவன் அன்றோ? அந்த இறைவன் இல்லம் கோவிலாவதில் வியப்பில்லை. குரு இல்லம் கோவிலாக இருந்ததை எண்ணிய பாரதி மீண்டும் அந்நிலை யைக் காணும் விருப்பத்தில் 'பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்" என்று பாடினான் போலும்.

இத்துணைப் பெருமை தந்த 'குரு' என்னும் சொல் நாட்டு வழக்கிலும் ஓரளவில் அப்பெருமையை விளக்கியது. மிகச் சிலரது வாய் வழக்கில் நிற்கின்றது. ஆனால், பெருவழக்காகக் குருக்கள் எனப் பரவி இந்து சமயக் கோவிற் பூசை செய்வோ

35. காந்த : 71 38. ஆசா. கோ : 57 : 1. 37. பாரதி பா : த.ப.க.பதிப்பு: