பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 61

ரையும். கிறித்துவ சமயப் பாதிரியையும் குறிக்கும் அளவில் நின்றுவிட்டதைக் காண்கின்றோம்.

அடுத்து, தேசிகன் என்னும் சொல் எழுத்து வழக்கில் தூய்மையையும் ஆன்மீகத்தையும் தலைமையையும் உணர்த் திற்றாயினும் தற்காலத்தில் தேசிகர் என்று வழக்காகி ஒதுவார் என ஒர் இனத்தாரைக் குறிக்கும் அளவில் சுருங்கி நின்று கற்பிப்போரை எவ்வகையிலும் அணுகாது அகன்றுவிட்டது.

திசைச் சொற்களாகிய ஒசன், பணிக்கன் என்னும் இரு சொற்களும் இலக்கிய வழக்கிலும் பிற எழுத்து வழக்கிலும் மிக மிக அருகியனவே. இவையிரண்டுமே கல்வியைத் தருவோருக்குப் பெரும் பெருமையை வழங்கியதாகக் கொள்ள இயலாது. நாட்டு வழக்கில் இவையிரண்டும் அறவே இல்லாதவை. ஓசன் சொல்லுதற்கே சிறப்பான ஒலியில் அமையவில்லை. ஒசன்’ என்னும் ஆண்பாற் சொல்லுக்குரிய பெண்பாற்சொல் 'ஒசி' என்பது. ஒர் அகர முதலி ஒசி - கல்வி கற்பிப்போனது மனைவி' என்று பொருள் காட்டியுள்ளது. இவ்வாறு எழுத்தறி விக்கும் இறைவனது மனைவியை ஓசியாக்கிய ஓசன் என்னும் சொல் பெருமைக்குரிய நிலையைக் காட்டவில்லை. பணிக்கன் என்னும் சொல் மலைஞாலத்திலும் ஓர் இன்னாதாரைக் குறிப்ப தாகவே வழக்கில் உள்ளது.

எஞ்சி நிற்பன உபாத்தியாயன் என்னும் வட சொல்லும், ஆசிரியன் என்னும் செந்தமிழ்ச் சொல்லுமாகும்.

இவற்றுள் உபாத்தியான் என்னும் சொல் எழுத்து வழக்கிலேயே உவாத்தியான் என்று மருவிற்று. உவாத்தி என்றும் குறுகிற்று. இச்சொல் வழக்கு உப அத்தியயநன் என்பதிலிருந்து உபாத்தியாயன் ஆகி அது மருவி உபாத்தியாயன் ஆகி அஃதும் உவாத்தியான் ஆகி உவாத்தி ஆக மாறி மேலும் தலையெழுத்து போய் வாத்தியான் ஆகி. அதிலும் ஆண்பால் விகுதி போய்ப் பெண்பால் விகுதி பெற்று வாத்தி என்று முடங்கி இறுதியாக நாட்டுப் பேச்சில்.