பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த நினைவை - தமிழ் நினைவை நிலையுறுத்த வே ன்டும்; அந்த நினைவு தமிழ் நெறியை அணுக வேண்டும்; அந்த அணுகல் தமிழ்ப் பண்பாட்டை அணுக்க மாக்க

வேண்டும்;

இவ் அணுகலும் அணுக்கமும் ஏன் வேண்டும்? விடை காணப்பட வேண்டிய வினாத் தான்.

ஏன் என்றால்,

உலக மாந்தர் இனப் பாங்கிலும், இனப் பகுப்பிலும் அவ் வ் இனத்திற்கு ஏற்ற நெறிகளும் பண்பாடுகளும் உள்ளன இவ் விரண்டும் ஓரினத்திற்கும் ம ற் ேற ரி ன த் தி ற் கு ம் ஒத்தும் நிற்கலாம்; எ நிராகவும் அமையலாம். மோதலாகக் கூடாது. உலக அளவில் பெரும்பகு தி ஒத்து வருபவை; அதிகம் எதிர்வு இல்லாதவை. உள்ள எதிர்வுகள் நிறத்தால் மதத்தால் நேர்பவை.

இ ந் தி ைலயி ல் விரல்விட்டு எண்ணக் கூடிய இனத்தாரின் நெறிகளும், பண்பாடுகளும் உலகப் பொதுமைக்கு ஊக்கந்தரு பவை. அவற்றில் இரண்டு தமிழ் நெறி. தமிழ்ப் பண்பாடு என்பது உண்மை. இவ்வுண்மை கொண்டு தமிழ்க் கருத்தைப் பரப்புவது; உலக தன்மைக்கு உதவும்.

இவ்வடிப்படையில்.

தமிழ் நெறியையும் தமிழ்ப் பண்பாட்டையும் ஒரு மாற்றுத் தொடரில் எழுதினால் உலக மாந்தர்க்குரிய பொது நெறிப் பண் பாட்டைப் பல முனைகளில் வெளிக்கொணர வேண்டும்; விரவ லாக்க வேண்டும். இப்பணியையும் வாழைக்கனி போல உரித்த வுடன் தின்னும் எளிமையாக, மாங்கனி போலக் கடித்தவுடன் இனிக்கும் இனிமையாக, பலாக்கனி (முழுக்கனி) போல பிளந்து பார்த்து எடுத்துச் சுவைக்கும் அருமையாக ஊட்ட வேண்டும்; உணர்த்த வேண்டும்; ஈடுபடுத்த வேண்டும். .

இதற்கு பழம்பெரும் தமிழ் நூல்கள் தோள்கொடுப்பவை: புதுப்பாங்கு நூல்கள் கைகொடுப்பவை. அவற்றிலிருந்து ஆர்ந்து, தோய்ந்து தேர்ந்து, ஒர்ந்து எடுத்த கருத்துக்களைப் பளிச்சிடச் செய்ய வேண்டும். . t .

தமிழுக்குக் கி.மு முதல் வடமொழி ஊடாட்டப் நேர்ந்தது பையப்பைய, ஆனால் உறுதியான, அதே சூழலில் திட்டமிடப் பெற்ற கீழுறுப்பு தொடங்கித் தொடர்ந்தது - தொடர்கின்றது. இத் தொடரிலும் தமிழ் தன் தலைப் பண்பை விட்டிலது. |