பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 63

உலக முக்கூறில் ஒருவர்

ஒரு பெரியவர் அளவில் அடங்காத துலாக்கோல் ஒன்றைப் பிடித்துப் பார்த்துக் கொண்டுள்ளார். இரண்டு தட்டுகளும் சமன் செய்து நிற்கின்றன. ஒரு தட்டில் இந்த உலகத்தை வைக் கின்றார். அதற்கு ஈடாகும் சிறப்புடைய பொருளை மற்றொரு தட்டில் வைத்து உலகத்திற்குச் சமமாக்கிப் பார்க்க விரும்பு கிறார். சமப்பொருள் குணத்தன்மையால், செயல் து.ாய்மையால் நடைமுறைச் சீரால் நிறையவேண்டும் என்பது அவர் அவா . தலில் குணத் தன்மையுடைய ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறார். தட்டில் வைக்கிறார். அவன் விருந்தினன். அறுசுவைக்காகக் செல்லும் விருந்தினன் அல்லன். என்றோ புதிதாக விருந்தினன் ஆகுபவன். அவன் தன்மை, விருந்து படைப்போனது இயல்பை யும் இயலாமையையும் அறியும் குணத் தன்மை. அவனை வைத்த தும், உலகத்தட்டு மூன்றில் ஒருபங்கு உயர்கிறது. அடுத்துச்செயல் தூய்மையுடைய ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறார். அதே தட்டில் வைக்கின்றார். அவன் உயிர்க்கொலையைத் தடுக்கும் தூய பணியினன் உலகத்தட்டு அடுத்த மூன்றில் ஒரு பங்கு உயர் கின்றது, மூன்றாவதும் இறுதியானதுமாக நடைமுறைச் சீருடைய ஒழுக்கமுடையானைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார். ஆழ்ந்து தேடுகிறார். ஒருவன் கிடைக்கிறான். அவனைச் சுண்டிப்பார்க் கிறார். தட்டில் வைக்கின்றார். அவன் ஆசிரியன். உலகத்தட்டு கியர்ந்து சமநிலை பெறுகின்றது.

பனை ஏட்டை எடுக்கின்றார்;

எழுத்தானியைப் பதம் பார்க்கின்றார்:

பொன்னெழுத்துக்களைத் தீட்டுகின்றார்: 'ஒல்வது அறியும் விருந்தினனும்: ஆருயிரைக் கொல்வது இடைநீக்கி வாழ்வானும்;-வல்லிசின் சீலம் இனிதுடைய ஆச்ரீனும்: இம்மூவர் ஞாலம் எனப்படு வார்'

- என்னும் பாடலைத் திரிசடுசத்தில்