பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 69

என்பது ஆகுபெயராய் வழக்கு’ என்னும் பொருள் தருவதா யிற்று.

பிற்காலத்து அவ்வையாரும், வழக்காடு மன்றத்தில் வழக் காடிப் பிறர் பொருள் பறிப்பதைக் கடிந்து, -

'மன்று பறித்து உண்ணேல்

என்றார். வழக்கு மன்றில் ஒரு சார்பாகத் தீர்ப்பளிப்பவனுடைய மனை பாழாகும் என்பதை,

  • மன்று ஒரம் சொன்னார் மனை' என்றார்.

பெரிய புராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் திருமணத்தில் புகுந்து வம்பு வழக்குச் செய்த சிவபெருமானைச் சேக்கிழார் “பழைய மன்றாடி போலும் இவன்" என்று கூற வைத்தார்.

ஆலமரத் தின் அடியிடமாக இருந்த மன்றம் கட்டட வளர்ச்சி யில் கூடத்திற்கு வந்தது. எனவே, மன்றம் என்பது வழக்கைத் தீர்க்கும் சான்றோரும் பொது மக்களும் அவையாகக் கூடும் கூடத்தைக் குறிப்பதாயிற்று.

மண்டபம்

‘மண்டபம்' என்பது கட்டி எழுப்பப்பட்டக் கட்டடத்தைக் குறிக்கும். பண்டைக்கால மண்டபம் எளிய கட்டடம் அன்று. எழிலோடும் மெருகோடும் இயற்றப்பட்டது. தோற்றப் பொலிவும் ஏற்றத் திறனும் கொண்டது. பொன்னால் புனையப்பட்ட மண்டபம் தமனிய மண்டபம்' எனப்பெற்றது. மணியால் அணி

பெற்ற மண்டபம் ‘மணிமண்டபம்' எனப்பெற்றது. பளிங்கு பாவப்பட்ட மண்டபம் 'பளிங்கு மண்டபம்" எனப்பெற்றது.

‘மண்டபம்' என்பது கட்டடச் சிறப்பை மட்டும் கொண்டது அன்று. இது கலைகள் தவழும் கவின் பெருங் கலைக்கோவிலாய்த்

18. ஆத்தி - 23 19. நல் - 23 20. பெரி. புரா - தடுத்தாட்கொண்ட புராணம் - 48