பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

orms

துண்டு 7 I

மண்டபம்' எனப்பெற்றது. இதன் கலைநுணுக்கத்தைக் கண்டோர் உயர்வு நவிற்சியாக இது மனிதனால் உருவாக்கப் பட்டதன்று மயன் என்னும் தெய்வத்தினால் ஆக்கப்பட்டது' என்று புகழ்ந்தனராம். -

இவை அரண்மனையில் அமைந்த அரசாட்சி மண்டபங்கள்.

திருப்பரங்குன்றத்து முருகன் கோவில் ஒர் அழகிய மண்டபம் எழுந்தது. அதில் ஒவியங்கள் ஒளிர்ந்தன. சிற்பங்கள் சிறந் திருந்தன. பலவகைப் புராணக் கதைகள் ஒவியங்களாகத் தீட்டப் பட்டிருந்தன; சிற்பங்களாக வடிக்கப்பட்டிருந்தன. இரதி, காமன் உருவம் தீட்டப்பட்டன. இந்திரன் பூனையாக வந்து அகலியைக் கூடியதும், அஃதறிந்த கெளதமன் சினந்து அகலிகையைக் கல்லுரு வாக்கியதுமான கதை திட்டப்பட்டிருந்தது. இம்மண்டபத்தை எழுத்து நிலை மண்டபம்' ' என்று பரிபாடல் பாடுகின்றது.

இது திருக்கோவிலில் அமைந்த கலை மண்டபம்

சோழநாட்டு அரண்மனைச் சோலையில் மன்னன் பொழுது போக்கிடம் இருந்தது. அங்கு அரசன் அமர ஒரு மண்டபம் எழுப்பப்பட்டிருந்து. அம்மண்டபத்தின் ஆக்கம் மிகச் சிறப்பாக வர்ண்ணிக்கப்பெற்றுள்ளது. அஃது எட்டுக்கோண வடிவில் அமைந்தது. அதன் திரண்ட தாண்கள் பவளம் பதிக்கப்பட்டவை. தூண்களின் மேல் அமைந்த போதிகைகள் மணிகள் கொண் டவை. மேற்கூரையாம் விதானம் சிறந்த வேலைப்பாடுகளுட்ன் பொன்தகடு வேயப்பட்டது. தரைச் சுண்ணாம்புச் சேற்றால் மெழுகப்படாமல் பொன்னால் தளம் போடப்பட்டதாம். இத னால் இம்மண்டபம் பொன் மண்டபம்' எனப்பெற்றது. இதனை விளக்கும் மணிமேகலைக் காப்பியம் மற்றொரு மண்டபத்தையும் காட்டுகின்றது.

மணிமேகலை, உதயகுமாரனுக்கு அஞ்சி ஒளிந்துகொண்ட மண்டபம் ஒன்று உவவனத்தில் இருந்தது. அஃதும் பவளத்தூண்,

24. * g. 5 - 1 1 0.

25, பரி - 19 - 5.3

2. 8 , மணி - 19 115