உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - ഞ ബr ! ;

பொன்சுவர், முத்துமாலை, ஓவியக்கரை கொண்டது. பளிங்குத் கண்ணாடி முகப்பைக் கொண்டது. இந்தப் பளிங்கு அறை பளிங்கு செய் மண்டபம்" என்றும், பளிக்கறை மண்டபம்:

என்றும் புகழப்பட்டது.

கோவலன் கொலையுண்டதும் மணிமேகலையுடன் துறவை மேற்கொண்ட மாதவி புத்த மடத்தில் அமைந்தாள். அங்கு மலர் தொடுப்பதற்காக ஒரு மண்டபம் இருந்தது. அது மலர் மண்டபம்" எனப் பெற்றது.

இவை சோலைகளில் எழுந்த மண்டபங்கள். இச்சோலை மண்டபங்கள் நான்கு, ஆறு, எட்டு தூண்களைக் கொண்ட வையாகச் சிறிய அளவில் எழுப்பப்பட்டவை. இவை நற் காட்சிகளைக் கண்டு மகிழ அமைக்கப்பட்ட பார்வை மண்ட பங்கள்.

பட்டி மண்டபம்

இவ்வாறு எழுந்த மண்டபங்கள் யாவும் தத்தம் இயல்புக் கேற்ற அடைமொழி பெற்றதைக் கண்டோம். கட்டடம் எழுப்பப் பட்ட மதிப்பரிய பொருள்களால் பொன் மண்டபம், பளிங்கு மண்டபம், மணி மண்டபம், பளிங்கு மண்டபம், (மணி மண்ட பம்) எனப்பெற்றன. செய்யப்பட்ட கலை ஒப்பனைகளால் சித்திர மண்டபம், எழுத்துநிலை மண்டபம் எனப்பெற்றன. நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் அடைமொழி பெற்றவை திருவோலக்க மண்ட பம், வேத்தியல் மண்டபம் என்பன. இறுதி இரண்டு பெயரும் ஆட்சிக் கலை நிகழும் மண்டபத்தைக் குறிப்பன. இங்கு வேந் தன் கொலுவீற்றிருந்து ஆட்சி செலுத்தும் நிகழ்ச்சியும் நிகழும்; வழக்குகளை உசாவித் தீர்ப்பளிக்கும் நிகழ்ச்சியும் நிகழும். இவ் விரண்டு நிகழ்ச்சிகளுள் கொலுவீற்றிருக்கும் நிகழ்ச்சி அன்றாடம் நிகழும் பெரும்பான்மை நிகழ்ச்சியாகும்.

இதேபோன்று, இவ்விரண்டு வகையிலும் புலமை ஆய்வு

p :

27, - 18 - 47

38. # * ~ 3 - 64

29. x * - 2 - 3