உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு - 75

எனவே,

பட்டி அரங்கம் பட்டி மன்றம் பட்டி மண்டபம்

ட என்னும் மூன்றும் சொற்போருக்குப் பிணைந்த தொடர் புடைய பெயர்கள்.

ஆயினும் இலக்கியங்கள் பட்டி அரங்கையும், பட்டி மன்றத் தையும் கொண்டு திகழும் களத்தை மண்டபப் பெயரிலேயே சொற்போர் நிகழ்ச்சியைப் பட்டி மண்டபம்" என்றே குறிக் கின்றன. கொங்கு வேளிர் எழுதிய பெருங்கதை மட்டும் பட்டி நியமம்' என்று குறிக்கின்றது. நியமம் என்பது நியமிக்கப்பட்ட இடம் என்னும் கருத்தில் மண்டபத்தையே குறிக்கும்.

சொற்போர் நிகழ்ச்சி பட்டி மண்டபம்’ என மண்டபத்தால் பெயர் பெற்றதோடு, சொற்போர் மன்றத்தாரும் 'பட்டி மண்டபத்தார்' என்று அழைக்கப்பெற்றனர். இதனைத் தொல் காப்பியத்துக்கு உரை வகுத்தப் பேராசிரியர்.

"தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு' என்று எழுதிக் காட்டுகின்றார். நச்சினார்க்கினியரும் மதுரைக் காஞ்சி உரையில் 'மண்டபத்தார்' எனச் சொற்போராளரைக் குறித்துள்ளார். பட்டி மண்டப அமைப்பு

பட்டி மண்டபத்தின் சட்டட அமைப்பை நோக்குவோம்; இம்மண்டபத்தின் நடுவே ஒரு சிறு தனி மண்டபம் அரங்க மேடையாக எழுப்பப்பட்டிருக்கும் இது 16 தூண்களைக் கொண்டதாகும். 4 தூண்களில் சிறு அரங்கமாகவும் அமையும் .

34. பெருங் - வத்தவ 2 78 35. தொல். பொருள் - 490 உரை 35. மதுரை, - 746. உரை

திருப்புறம்பி யம் கல்வெட்டு