பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வளையல்

16 தூண்களாயின் நடு நான்கு தூண்களின் இடைத்தளம் மேலும் சற்று உயர்ந்த மேடையாக உயர்த்திக் கட்டப்பட்டிருக் கும். 4 தூண்களாயின் அவற்றின் இடைத்தளம் இவ்வாறு மேடையாக்கப்பட்டிருக்கும். இந்த நடு மேடையில் சொற்போ ராளர் இருந்தோ நின்றோ சொற்போரிடுவர். இஃதே பட்டி அரங்கமாகும். இந்நடு மேடையைச் சுற்றியுள்ள சுற்று மேடையில் நடுவரும் பட்டி மண்டபத்தாராம் சான்றோரும் அமர்வர். இத்துரண்கள்மேல் கருங்கல் பாவப்பட்ட தனிக்கூரை அமைத்திருக் கும். இவ்வாறான அரங்கப் பகுதியே நூல்களை ஆராயும் அரங்கமாகும். இவ்வரங்கமே நூல்கள் அரங்கேற்றப்படும் அரங்கமாகும். புலவர்களுக்குப் பெருஞ்சிறப்பும் பட்டமும் பரிகம் வழங்கும் மன்னவன் இவ்வரங்கிலேயே அச்சிறப்பான நிகழ்ச்சியை நிகழ்த்துவான். பட்டினப்பாலையை எழுதிய உருத்திரங்கண்ண னார்க்குப் பரிசாகப் பொன்னை வழங்கிய சோழன் கரிகாலன் இத்தகைய கோல் மண்டபத்திலேயே அச்சிறப்பைச் செய்ததாக ஒருகல்வெட்டு அறிவிக்கின்றது.

இக்காலத்திலும் இத்தகைய 16 கால் மண்டபங்கள் தனித் தோற்றமாகத் திருக்கோவில்களின் உட்புறத்திலும், வெளிப்புறத் திலும், திருக்குளத்தின் மையத்திலும் ஊர்ப்புற எல்லையிலும் காட்சியளிப்பதைக் காண்கின்றோம். திருவிழாக் காலங்களில் கடவுளாரின் திருவுருவங்களை ஒப்பனைகளுடன் இவ்வரங்கில் எழுந்தருளுவித்து மக்கள் கண்டு வணங்கச் செய்வதைக் கான லாம். இது கடவுள் திருவோலக்கக்காட்சி. -:

இவ்வாறான 16 கால் மேடை அரங்கத்தைச் குழி அவை யோர் கூடும் கூடம் அமைந்திருக்கும். அரங்கத்தையும் கூடத்தை யும் கொண்ட பரந்த பட்டிமண்டபத்தின் மேற்கூரை முழுதும் மாட அமைப்பில் செங்கற் சாந்தால் மேல் வளைவு மேல் வளைவாக மூடப்பட்டிருக்கும். கருங்கற்களாலும் பாவப் பட்டிருக்கலாம். சுற்றிலும் சுவர்களால் அடைக்கப்பட்டு வாயில் கதவுகள் கொண்ட கட்டுக் கோப்பான மண்டபமாக அமைத் திருக்கும். -

கருத்துப் போருக்காக எழுந்த 'அறைகூவல்: ஏற்கப்படும்

e & 密、峪 乏 .. を * * வரை படடி மண்டபம் அடைக்கப்படும்’ என்ற மரபாலும்,