பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 7 7

தெற்கண் வாயில் திறவாத பட்டி மண்டபத்தார்' ' என வருவது கொண்டும் நான்கு புறத்துமோ, தெற்கு, கிழக்கு என இரண்டு புறத்துமோ வாயில்களும் அவற்றிற்குக் கதவுகளும் அமைந்திருப்பதை அறிகின்றோம்.

பட்டி மண்டபம் - சிறப்பின் சின்னம்

இத்துணைச் சிறந்த பட்டி மண்டபம் மன்னரது அரண் மனைகளில் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. அரண்மனையின் ஒரு சிறந்த உறுப்பாகத் திகழ்ந்தது. மன்னனது சிறப்புகளை அறிவிக்கும் பட்டியலில் பட்டி மண்டபமும் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. மன்னனது வெற்றிச் சிறப்பின் ஒர் அடையாள மாகவும் பட்டி மண்டபம் சிறப்புற்றிருந்தது.

சோழன் கரிகாற் பெருவளத்தான் தன் வீரப் புகழை நிலை நாட்ட வடநாட்டுப் பயணத்தை மேற்கொண்டான்; பகைத் தோரைப் பணிய வைத்தான்: பணிந்தோரை நண்பராகக் கொண்டான், இமயத்தில் புலி பொறித்து வெற்றியுடன் மீண் டான். தன் வெற்றியின் சின்னமாகத் தன் திருவோலக்க மண்ட பத்தைச் சித்திர மண்டபமாக்கினான். அம்மண்டபத்தில் "கொற்றப் பந்தர்” ஒன்று வச்சிர நாட்டு வேந்தனின் திறைப் பொருளாகப் படைக்கப்பட்டது. அவந்தி நாட்டு மன்னன் உவந்து தன் அன்புக் காணிக்கையாகப் படைத்த தோரண வாயில்” அம்மண்டப முகப்பில் விளங்கியது. பகைத்துத் தோற்ற

"மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்

பகைப்புறத்துக் கொடுத்தப் பட்டி மண்டபமும் " அச்சித் திர மண்டபத்தில் அமைந்தது. பண்டைக்காலச் சோழர் களில் பெருஞ்சிறப்புடையவன் கரிகாற் பெருவளத்தான் அவனது வெற்றிச் சின்னமாகப் பட்டி மண்டபம் இடம் பெற்றதை நோக்கும்போது அதன் சிறப்புப் பளிச்சிட்டுத் தோன்றுகின்றது.

37. தொல். பொருள் 490 உனர

38. சிலம்பு 5 - 101, 102