பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வளையல்

ஆனால் இங்கே ஒர் ஐயம் குறுக்கிடுகிறது.

இத்துணைச் சிறப்புடைய சித்திர மண்டபச் செய்தியைச் சிலப்பதிகாரத்தில்தான் காண்கின்றோம். கரிகாற் சோழனைத் தலைவனாக வைத்துப் பாடப்பட்டது பட்டினப்பாலை என்னும் சங்க காலப் பாட்டு. இப்பாட்டில் இதுபற்றிய செய்தி இல்லை. இஃது ஐயத்தைத் தரக்கூடியதே. அதற்கு அமைதியை அந்நூலில் கரிகாற் சோழனது வடநாட்டுப் பயணம் பற்றிய செய்தி குறிக்கப்படாதது கொண்டே கொள்ளமுடிகின்றது. எச்சிறு குறிப்பாகவும் அவனது வடபுல வெற்றிக் குறிக்கப்படவில்லை. இதனால் வடநாட்டுப் பயணமே நிகழவில்லை என்று கூற இயலாது. இமயத்தில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டமைத் தற்காலத்திலும் அறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அவனது வடநாட்டுப் பயணத்திற்கு முன்னர் பட்டினப்பாலை இயற்றப்பட்ட தாகின்றது. இதனால் ஐயம் பைய நையும்.

செங்கோல் ஆட்சியின் நல்லமைப்புக்கள் பல. அவற்றை உதயணன் மேல் வைத்து விளக்குகின்றார் பெருங்கதை ஆசிரியர் கொங்கு வேளிர். அவனது ஆட்சித் திறத்தில் ஒன்றாக,

'பட்டி நியமப் பதிமுறை நிறீஇ' யதைக் குறித்துள்ளார் பட்டி மண்டபத்தில் தலைவனாக-நடுவனாக அமர்ந்து நேர்மை யானத் தீர்ப்பை நிலைநாட்டியதை இவ்வடி குறிக்கின்றது.

இதுபோன்றே மதுரைக் காஞ்சியிலும் ஒரு குறிப்பு உள்ளது 'மதுரைக் காஞ்சி என்னும் நூல் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் மேல் மாங்குடி மருதனார் பாடிய பாட்டு. அதனில் அவன் நாள் தோறும் நடத்தும் திருவோலக்கத்தில் பல கலைஞரையும் அழைத்து அவரவர் வேண்டுவதை வழங்க வேண்டுமென மருதனார் பாடி யுள்ளார். அவ்வாறு அழைக்கப்பட வேண்டியவருள் 'ஏனோரும்

39. பெருங் வத்தவ - 490