துண்டு -- . . . ... 79
தம' எனக் குறித்தார். இந்த ஏனோரும் என்பதற்கு நச்சி னார்க்கினியர் 'மண்டபத்தாரையும் அறங்கூறவையத்தாரை யும்' என்று பொருள் கூறினார். இதற்கும் அடிக்குறிப் பெழுதிய தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் இங்கு மண்ட பத்தார்' என்றது பட்டி மண்டபத்தாரைப் போலும்” என்று எமுதியுள்ளார். இது பாண்டியன் அவையில் பட்டி மண்டபம் இருந்ததற்குச் சான்றாகும். இதுகொண்டு நெடுஞ்செழியன் பட்டி மண்டபத்தாரை அழைத்து வேண்டியன செய்வது செங் கோல் ஆட்சி முறைக்கு வேண்டிய ஒன்றாக இருந்தது என்பதை யும் அறிகின்றோம்.
பெருங்கதைச் செய்தியையும், மதுரைக் காஞ்சியின் செய்தி யையும் கொண்டு மன்னர் தம் அரண்மனையில் செங்கோலின் சின்னமாகப் பட்டிமண்டபம் இடம் பெற்றிருந்தமை புலனா கின்றது.
கல்வியில் பெரியவராகிய கம்பர் தமிழ்நாட்டு நினைவில் நின்றுகொண்டு அயோத்தி மன்னன் தயரதனது அரண்மனை யைப் பாடுகின்றார். அங்கு அமைந்த மண்டபங்களை அடுக்கிப் பாடுகின்றார்.
'மன்னர் தரு திறை அளக்கும் மண்டபம்; அன்னமென் ன டையவர் ஆடும் மண்டபம், உன்னரும் அருமறை ஒதும் மண்டபம்: பன்ன அரும் கலை தெரிபட்டி மண்டபம்,'
-என்று பட்டி மண்டபம் அரண்மனையில் அமைந்ததை விளக்கத் துடன் குறித்துள்ளார். தென்னிலங்கைப் பெருவேந்தன் இரா வணனது அரண்மனையிலும் 'பாடல் வேதிகைப் பட்டி மண்ட பம்' திகழ்ந்ததை அனுமன் காண்கின்றான்.
40. மது 746
41. , , - 746 42. கம்ப இரச நகரப்படலம் 62
43. , , ஊli தேடு - 133 - 3
3.