பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வளையல்

இவ்வாறாகப் பட்டி மண்டபம் அரண்மனையில் ஒரு சிறப் பாகவும், இன்றியமையா உறுப்பாகவும், மன்னனால் போற்றத் தக்க மாண்புடையதாகவும் விளங்கியதாகும்.

திருவிழாக் காலங்களில் இத்தகைய பட்டி மண்டபத்தில் சொற்போராளர் சொற்போர் நிகழ்த்த அழைக்கப்படுவர் மணிமேகலையில் இந்திர விழாவை அறிவிக்கும் அறிவிப்பில்,

"ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்தேறுமின்'

எனப் பட்டி மண்டபத்தில் பங்கு கொள்ளுமாறு அழைக்கப் பட்டதை முன்னரும் அறிந்தோம். இங்கும் 'பாங்கறிந்து ஏறு மின்' என்னும் குறிப்பால் பட்டி மண்டபம் ஏறும் மேடை அமைப்பை - அரங்கைக் கொண்டது என்பதையும் உணர முடி கின்றது. -

இத்தகைய பட்டி மண்டபம் திருக்கோவில்களிலும் அமைந் திருந்தது. அங்குச் சமயத்துறைச் சான்றோர் கூடிச் சமயத்துறை நூல்களைப் பயின்று ஆராய்ந்தனர். அத்தகைய பட்டிமண்டபம் ஒன்றில்தாம் இடம் பெற்றதை மாணிக்க வாசகர் பாடுகின்றார்;

கட்ட றுத்தெனை ஆண்டுகண் ண்ார நீறு - இட்ட அன்பரொடு யாவரும் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோடு (அ) இரண்டும் (உ) அறியே னையே'49

இதனில் மாணிக்கவாசகர் தன்னை 'அ' என்ற எழுத்தும் 'உ' என்ற எழுத்தும் அறியாதவன் என்று தாழ்த்திக் கூறிக் கொண்டது கொண்டு அப்பட்டி மண்டபம் எத்துணை மேம்பட்ட சான்றோரைக் கொண்டு திகழ்ந்தது என்பதை அறியலாம்.

இங்கும், "ஏற்றினை ஏற்றினை என்றிருத்தல் நோக்கத்தக்கது.

48. திருவா - திருச்சதகம் - 49