துண்டு - 31
அஃதும் இரண்டிடத்தில் அமைந்து அரங்க மேடைக்குப் படியில் ஏற்றியதையும், பதவியில் ஏற்றியதையும் அடுக்கிக் காட்டுகின்றது. r
தஞ்சை மாமன்னன் இராசராசன் தான் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் ஒரு மண்டபத்தில் இலக்கண, இலக்கிய ஆராய்ச்சி நிகழ ஏற்பாடு செய்து அதற்கோர் அறக் கட்டளையும் அமைத்ததை அவனது கல்வெட்டு காட்டுகின்றது. இஃது பட்டி மண்டப் வரலாற்றில் ஒரு கல்லாகும்.
இவ்வாறாகத் -
தமிழகத்தில் பழங்காலம் முதற்கொண்டே அரண்மனை
களிலும் திருக்கோவில்களிலும் பட்டி மண்டபம் எழுந்து திகழ்ந்
ததைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
இதுவரை கண்ட சான்றுகளைக் கொண்டு பட்டி மண்டபம் என்பது புலமைக்கலை நிகழும் மண்டபம். அப்பட்டி மண்டபம் புலமை வழக்காம் சொற்போர் நிகழும் மண்டபமும் ஆயிற்று காலப்போக்கில், புலமைக் கலை நிகழ்ச்சி அருகிச் சொற்போர் நிகழ்ச்சி பெருகியதால், பிற்காலத்தில் பட்டி மண்டபம் என்பது சொற்போருக்குரியது ஆகிற்று; இப்பட்டி மண்டபம்,
அரங்கும் மன்றமும் கூடிய கட்டடமாயினும் அங்கு நிகழும் சொற்போர் நிகழ்ச்சிக்கு ஆகுபெயராகியது. ஆகி, -
சொற்போர் நிகழ்ச்சியே பட்டி மண்டபம் என்னும் பெயரைப் பெற்றது.