பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படையாகும். அத்தகைய வேல் ஏந்தவேண்டிய பாண்டியன் தன் செங்கோல் கோடியதால்-முறை தவறியதால்-தண்ணிழல் தந்தளிக்கும் வெண் கொற்றக் குடையும் கொடுமை விளைவித்து விடுகிறதாம்! மண் குளிரச் செய்யு மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளேத்த திது வென் கொல் ' என அயர்ந்த இளங்கோவடிகள், இக்கொடுமையைக் கானச் சகியாமல் செங்கதிரோனும் நிலமகளே இருளுட்டி மேற்றி சை யில் சென்ருெளிகிருன் எனக்கூறி அவலக்குமுறலை வெளியிடு கிருர். இதனே, - மல்லன்மா ஞாலம் இருளுட்டி மாமலை மேற் செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்ருெளிப்ப எனும் பகுதியுள் காண்க. மேலும், அங்க ண் உலகம் செழிக்க அடிப்படையானவை திங்களும் ஞாயிறும் மாமழையும் என்பர் (மங்கல வாழ்த்துக்காதை). ஈண்டுத்திங்களும் மாமழையும் அடி சாய்கின்ற நிலையில் ஞாயிறும் சென்ருெளிப்பது மிகப் பொருத்த மாகிவிடுகிறது. 7. கணவன் கொலேக் களப்பட்டான் எனக் கேட்ட கண்ணகி பதறிப்போய்க் கதறி வீழ்கிருள். அவளுடைய கூந்தல் சரிய மதிமுகம் நிலத்திலே மோதிச் சாய்ந்து கிடக்கிறது; அவள் செங்கண்கள் கண் ணிர் வடித்து ஏங்கி நிற்பதால் சிவந்து காணப்படுகின்றன; இத்தகைய அவல அலங் கோலத்தைப், பொங்கி யெழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கண் முகிலோடுஞ் சேணிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப வழுதாள்தன் கேள்வனே எங்கனஅ வென்ன இனந்தேங்கி மாழ்குவாள்' என வரும் துன்பமாலைப் பகுதியால் காணலாம். கண்ணகியின் முகம் திங்களெனவும், கூந்தல் முகிலெனவும் உவமைப் படுத்து 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/100&oldid=743215" இலிருந்து மீள்விக்கப்பட்டது