பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் யாருக்கு திரு ஆ. இராமசாமிப் பிள்ளை அண்ணுமலேப் பல்கலைக்கழகம் ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் - குறள் 228 இக்குறட்பாவினுக்குப் பழைய உரையாசிரியர்கள் எல்லோ ரும் ஒருபடித்தாகவே உரை கூறியுள்ளனர். “தாம் உடைய பொருளே ஈயாது வைத்துப் பின் இழந்து போம் அருளிலாதார், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ - பரிமேலழகர். கொடுத்த கொடையில்ை பெற்றவர்க்கு வரும் முக மலர்ச்சியைக் கண்டறியரோ தாம் உடைய பொருளைக் கொடாதே வைத்துப்பின் இழக்கின்ற வன் கண்ணர்??? - மணக்குடவர். 'கொடுத்து அதனுல் வரும் இன்பம் அறியார் யாரென் னில் உடைமையைத் தேடி வைத்துத்தாலும் பொசியாமல் பாழே கெடுப்பவர்' - பரிதியார். ‘'வேண்டுநர் யாவருக்கும் கொடுத்து, அதனுல் தனது மனம் மகிழும் இன்பத்தை அறியார் போலும், உடைமையாகிய பொருளினை வழங்காது ஈட்டிவைத்து இழந்து உயிர் கழியும், தறுகணளர்' - காளிங்கர். 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/102&oldid=743217" இலிருந்து மீள்விக்கப்பட்டது