பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெனக் கூறி இறுமாப்படைய முடியுமா? எப்படியோ, பொருளைப் பெற்றவனும் சரி, அப்பொருளை ஈபவனும் சரி உண்மையான, புனிதமான இன்பம் எய்துகின்ருன் எனச்சொல்ல முடியவில்லேயே, அவ்வாருயின் இக்குறட்பா தவருனது, பொருத்தமற்றது என்ற குறைகூறி ஒதுக்கிவிட முடியுமா? முடியாது. 1330 அருங் குறளில் இதுவும் ஒன்று என்பதை மறந்துவிட முடியாது; எனவே இக்குறளுக்கு உண்மையான , பொருத்தமான உரை ஒன்று காணவேண்டுமென பது புலனுகின்றது. அந்தப் பொருந் திய உரைதான் என்ன? சிறிது பார்ப்போம். கீழ்க்கண்ட காரணங்கள் நமக்கு ஒரு புத்துரை தருகின்றன. 1. திருக்குறள் நூலின் 23-வது அதிகாரமான ஈகை' என்ற அதிகாரத்தில் பரிமேலழகர் உரைப் பதிப்பில் இக்குறள் 8-வது செய்யுளாகும் இவ்வமைப்பையே ஏனய உரையா சிரியர்களும் ஒப்புகின்றனர். அவ்வதிகாரத்திலுள்ள பத்துக் குறட்பாக்களையும் நோக்குங்கால் 5, 6, 7, 9 என்ற நான்கு குறட் பாக்களும் இரப்பார்க்கு உணவு ஈதலேயே குறிப்பிடுகின்றன. பரிமேலழகர், குறட்ப க்களைத் தம் அதிகாரங்களில் அமைக்கும் மரபு முறைப்படி, முதற் குறள் அதிகாரத் தலைப்பின் (ஈகை) விளக்கமாகவும், 2, 3, 4 குறட்பாக்கள் அதனே வலியுறுத்தியும், இறுதி 10-வது குறள் ஈயாமையின் குற்றத்தையும் எடுத்துக் கூறுவதாகவும் அமைகின்றன. இவ்வதிகாரத்தின் ஏறக்குறைய செம்பாதிக் குறட்பாக்கள் இரப்பர்க்கு உண்டியிதலேயே விதந்து வற்புறுத்துகின்றன. செல்வப் பொருள் ஈதலேப்பற்றி (உணவு ஈதலைப் போல்) வெளிப்படக் கூறவில்லை. இந்த எட்டாவது குறளில் மாத்திரம் தாம் தேடி வைத்த செல்வப் பெருள்” என்று வலிந்து உரை கொள் வானேன் ? வறியார்க்கு ஒன்று’ என்ற தொடருக்கு அவர் வேண்டிய தொன்று’ என்று கூறுமிடத்து அது செல்வப் பொருள்தான் என்று கூறிவிட முடியுமா? வேறு பொருளும் இருக்குமல்லவா? 2. தாம் உடைமை' எனற தொடருக்குத் தாம் தேடிவைத்த செல்வப் பொருள் என்று உரை கொள்வது பொருந்துமா? உண்மையில் செல்வப் பொருள் ஒருவருக்கு ஒர் உடைமையாகு மோ? பிறனில் விழையாமை என்ற அதிகாரத்தின் முதற்குறள் 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/104&oldid=743219" இலிருந்து மீள்விக்கப்பட்டது