பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம் பொருள் கண்டார்கண் இல்?? என்பதாகும். இதற்கு உரை காணும்பொழுது “பிறன் பொருளாள் பிறனுக்குப் பொருளாந் தன்மையில் பிறனுக்கு உடைமை யானவள் என்று பரிமேலழகரும் பிறரும் கூறிப் போர்ந்தனர். இதிலிருந்து உடைமை' என்பது ஒருவனுக்கு உரியதாகி அவனை விட்டுப் பிரியாமல் அவனுடனேயே என்றும் இருக்கும் பொருளேயே குறிக்கும். தமிழர் பண்பாட்டையொட்டி நூலெழுதிய நம் திருவள்ளுவர் ஒருவனது உடைமை என்பதை அவனுடைய மகனவியையே குறித்தார். உண்மையறிவுக் கண் கொண்டு காணும் பொழுது எந்த ஒரு குடும்பமும், சமுதாயமும் இதனே உண்மையாகவே ஏற்றுக் கொள்ளும். இதனையே கற்பு என மதித்துக் கூறும் தமிழுலகம். அவ்வாற்றிருக்க சகடக்கால் போலச் சுழன்றுவரும் செல்வத்தை, ஓரிடந்தனிலே நிலைத்து நில்லாது உலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் செல்வத்தை செல்வம் என்ற சொல்லே செல்ே 鷺 செல்வோம்’ என எச்சரிக் கும் குறிப்புப் பொருளேத் தரும் ெ o த்தை, ஒரு வனது உடைமை என்று சொல்லலாமா? தன்னி 驚 பிரியாத மனே யாளேச் சிவனடியாருக்குக் கொடுத்த பீெரிய தியாகியாம் காவிரிப்பூம் பட்டினத்து வணிக அடியாரை இயற்பகை யார்’ என்றே வேறு படுத்திக் கூறினரே நம்பியாரூரர். தெய்வச் சேக்கிழாரும் அக் காலத்திலேயே தமிழ்ச் சுற்றமும், சமுதாயமும் ஒன்று சேர இச் செயலே எதிர்த்து நின்றதாக விதந்து கூறியிருக்கிருரே? இவற்ருல் நம் குறளிலும் தாமுடைமை’ என்ற சொற்ருெடருக்குத் தமது ம&னயாள் என்று விரைந்து கூறி விடலுமாகாது. 3. அவ்வாருயின் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத வேருெரு உடைமைதான் என்ன? அதுதான் நாம் கற்ற கல்வி. கல்வியோ வைப்புழிக் கோட் படாது, வாய்த்தது ஈயில் கேடில்லே (நாலடி u ] II ர்.) 'ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏ மாப் புடைத்து’ என்று கூறுவது வள்ளுவம். ஒருவன் தேடிக் கற்ற கல்வியை அவனது உடைமை’ என்று கூறுவதில் தவறேயில்லை. இதனைப் பிறருக்கு ஈவதால், உடை 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/105&oldid=743220" இலிருந்து மீள்விக்கப்பட்டது