பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையாம் மனே யாளேக் கொடுப்பது போன்ற பழியேற்படுவதில்லே . மேலும் கல்வியறிவைப் பிறருக்கு அளிப்பதால், பொருளைக் கொடுப்பதிற் போலக் கொடையாளனுக்குக் குறைந்து விடுவ தில்லை; மாருக மேலும் மேலும் கல்வியறிவு வளரும் . இனிநம் குறட்பாவின் சிறப்பைக் காண்போம் ஈத் துவக்கும் இன் பத் தை மாணவனிடமும் ஒரு சேரக் காணலாம். தாமின் புற்றது பிறர் இன் புறக் காண்பது தானே கற்றறிருந்தாருடைய பண்பு. கல்வி பெறும் மாணவ னும் தான் கற்கும் ஒவ்வொரு நிலே யிலும் பூரண திருப்தி கொள் வான் ; உவந்து மகிழ் வான். ஆசிரிய னும் தன்னிடம் கற்ற (கல்விக் கொடைபெற்ற) மாணவனின் தேர்ச்சி மகிழ்ச்சி கண்டு தானும் மகிழ்ந்து இன்புறுவான். “தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர் க் கெல்லாம் இனிது’ - அல்லவா? தன்னிடம் கற்ற மான வன் நல்ல தேர்ச்சி பெற்று இன்புறுவதைக் கண்டு பொருமையுற்று ஆசிரியர் புழுங்கினர் என்பது ஒரு வெற்றுக் கற்பனையே. மாணவனுக்குக் கற்றுத் தருவதால், ஆசிரியருக்கு அறிவு இழப்பு ஒன்றுமில்லை. எனவே கல்விக் கொடை பெற்றமான வனுக்கு உவப்பு ; அவ்வுவப்பினே க் கண்ட ஆசிரியனுக்கும் ஏற்றவன் உவத் தலைப் பார்த்துப் பேரின் பம். இவ்வாறு தாம் கற்றுத் தேடிய கல்விச் செல்வத்தைப் பிறருக்கும் கொடுத்து அவரை மகிழச் செய்து, அவருக்கு நல் வாழ்க்கை க்கு வழி காட்டிய ஆசிரியனே ப்பற்றிய குறளே இது. 9 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/106&oldid=743221" இலிருந்து மீள்விக்கப்பட்டது