பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயல்நாடுகளில் அருந்தமிழ் திரு. பா. வளன் அரசு பாளையங்கோட்டை 'தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்’ (1) என்று பாட்டுக்கொரு புலவர் பாரதியார் பறைசாற்றியுள்ள கொள்கை இன்று பாரெங்கும் முறையாக முழங்கவும் சீரோங்கிச் செயலா கிச் சிறந்தொளிரவும் காண் ரும். ஐரோப்பியர் |க்களைப் பெற்று நானி தொடர்பால் பைந்தமிழ் பல்வேறு வன 1730-ஆம் ஆண்டில் வீரமாமுனிவர் திருக்குறளே இலத்தீன் மொழியில் பெயர்த் தளித்த காலந்தொட்டு ஞாலத்து மொழிகள் பலவற்றில் குறள் அறமும் தமிழ் மணமும் க மழத் தொடங்கியதாக அறிகிருேம். லமெங்கும் விரைந்து பரவியுள்ளது. "வள்ளுவன் தன் னே உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' (2) என்னும் பாராட்டு உண்மை ; வெறும் புகழ்ச்சியில்லே. குறளைப் பறையறைந்து குமரித் தமிழ் குவலய மெங்கும் தழைத்தோங்கிட உழைத்து வரும் பெரியோர் பலர். தமிழ் கூறும் நல்லுலகம் குறுகிய வட்டமாக அல்லாமல் பெருகிய பரப்பாக விளங்குவதும் உலகத் தமிழ் மாநாடுகள் ஈராண்டுக் கொருமுறை உலகில் பல்வேறு இடங்களில் கூடுதலும் தமிழின் வளர்ச்சியைப்புலனுக்குபவை. வட வேங்கடம் தென் குமரி என்னும் எல்லே க்கு அப்பாலும் வண்டமிழ் வளர்ந்து வருவது பெருமிதம் தருவதாகும் வானெலி வாயிலாகவும் பல்கலைக் கழகங்கள் வழியாகவும் ஏடுகள் மூலமாகவும் தூதர் தம் தொடர்பாலும் தரணியெங்கும் தமிழ் சிறப்புடன் திகழ்கிறது. 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/107&oldid=743222" இலிருந்து மீள்விக்கப்பட்டது