பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிலாந்து ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் 1884 முதல் 1906 முடிய சார்ச்யு க்ளோ போப்பு தமிழ்ப் பேராசியராக வீற்றிருந்தார். இலண்டனில் உள்ள பிரித்தானிய காட்சி சாலே நூலகத்தில் தமிழ் நூற் பட்டியல் 1909-ஆம் ஆண்டிலும் மீண்டும் 1931-ஆம் ஆண்டிலும் உருவாக்கியுள்ளார். 1886-இல் போப்பையரும், தொடர்ந்து கிண்டர்சுலி, பிரான்சிசு ஒயிட் எல்லீசு, துரு, இராபின்சன் ஆகியோரும் குறளே ஆங்கிலத்தில் மொழி பெயர்த் தெழுதினர். பாப்ளி நீதிப்பாக்களே மொழி பெயர்த்து “சத் சமய விளக்கம்” வெளியிட்டார். சீவக சிந்தாமணியில் நாமகள் இலம் பகத்தைப் போவர் அவர்களும், பரமார்த்த குருகதையைப் பெஞ்சமின் கெய் பேபிங்டனும், “சிவஞான போதம்” நூலேக் கார்டன் மத்தேயும் மொழி பெயர்த்துள்ளனர். “தமிழ் வினைச் சொல்லில் தன் வினை, பிறவினை என்னும் இரு கூறுகளும் உள. எனவே புதிய சொல்லாக்கத் துக்கு ஏற்ற மொழியாகத் தமிழ் திகழ்கிறது” என்று எடுத்தியம்பி உள்ளார் சாண் மார். முனைவர் சாண் மாரும் ரோசிரியர் ஆசரும் எடின் பரோ பல்கலைக் கழகத் தில் தமிழ் ஆராய்ச்சியைச் சீராக மேற்கொண்டு துாண்டிவரும் பொறுப்பேற்றுள்ளனர். வில்லியம் டெய்லரும் வில்சனும் தமிழ் ஒ8லச் சுவடிகளைத் தொகுத்து இலண்டன் காட்சிச் சாலேயில் வைத்துள்ளனர். விவிலியத் தமிழ் அகராதியையும் 'ஒளி மகுடம்: நாடகத்தையும் கிளாங்குடன் வழங்கியுள்ளார். "தென்னிந்திய நாட்டுப் பாடல்கள் பற்றிக் கோவரும் 'தமிழறிவு” குறித்து இராபின்சனும் எழுதியுள்ளனர். தமிழ் நீதி நூல்களே வின் பி ரெட்டும், நளவெண்பா வை இலாங்குடனும் நாட்டுப் பாடல்களே எர்மன் சென்சனும், தமிழ்ப் பழமொழிகளைப் பெர் சிவலும் ஆங்கிலத்தில் தீட்டியுள்ளனர். பேராசிரியர் T. பரோ திராவிடச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை ஆக்கியுள்ளார். வால்டர் எலியட், பர்னர், பாக்சு, பிளிட் ஆகியோர் பத்தொன் பதாம் நூற்ருண்டுக் கல்வெட்டுக்களேத் தொகுத்து வெளியிட்ட னர். பி. பி. சி. வானெலியில் 'தமிழோசை.” தனிச் சிறப்பிடம் பெறுகிறது. இலண்டன் தமிழ்ச்சங்கம் தமிழ்த் தொடர்பான பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்கிறது. 1 0 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/109&oldid=743224" இலிருந்து மீள்விக்கப்பட்டது