பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேயப் பொருளுக்கும் மிக நெருங்கிய பொருத்தமிருப்பது சங்கப் புலவர்களின் தனிச் சிறப்பாகும். அவ்வுவமைகளைக் கேட் போரும், கற்ருேரும் மறக் கொண்ணுச் சிறப்பின வாய் அவை விளங்குகின்றன. சங்கச் செய்யுட்களில் வடிவு, வண்ணம் என்ற வகையில் உவமைகள் அமைவது ஒர் பகுதியாம். தொழில் , பண்பு, பயன் என்ற இவை காரணமாக ப் பிறக்கும் உவமைகள் மேற் சொன்ன வடிவு வண்ண உவமைகளே விட மிகுதி எனலாம். நுண் பொருளான பண்பு உவமைகளைப் போற்றிச் சொன் ன நெறி தமிழ் இலக்கியத்தின் செவ்விக்கு ஒரு சான்ற கும். இவ்வாறு சொல்லுங் கால் இயற்கை வனப்பையோ மரம், விலங்கு முதலிய வற்றையோ, வாழ்வியல் நிகழ்ச்சிகளேயோ அப்படியே கண்முன் காட்டும் வகையில் சொல்லோவியமாகத் தீட்டியுள்ளனர். இவ் வுவமைகளிற் சில இன்று நமக்கு அரியனவாகவும், புரியாதன வாகவும் உள்ளன. அவற்றில் நமக்குப் பயிற்சியின் மை ஓர் கார னம். சங்கப் புலவர்கள் கூறும் உவமம் பொருள்களேக் கேள்வி யளவிலேயே நாம் அறிய முடிகின்றதே தவிர நேரிற் கண்டுணர வழியில்லே என்பது மற்றுமோர் காரணம். தொல்காப்பிய உவமை-சங்க உவமை தொல்காப்பியர் தொழில், பயன் , வடிவு, நிறம் என்ற இந் நான் கை நிலேக் களமாகக் கொண்டு உவமைகள் பிறக்கு மென்றனர்! சங்கப் புலவர்களின் உவமைகள் இவ்வடிப்படை யில் செய்யப்பெற்றுள்ளன. இவற்றின் நிலே க் களத்துப் பிறக்கும் உவமைப் பொருட்கள் ஐந்து பெருங் கூறுகளாக அமையக் காணலாம். அ. புலவர்கள், தாம் அன்ருடம் கண்ட மரம், செடி, கொடி , மலர், விலங்கு , ஊர்வன, பறப்பன, நீந்துவன ஆகிய இவற்றின் வடிவையும், நிறத்தையும், செயலேயும் உவமைகளாக்கி யுள்ளனர். ஆ. மக்களின் வாழ்க்கையில் நாளும் காணலாகும் பழக்க வழக்கம், ஒழுகலாறு, வாழ்வியல் முறை இவற்றையும் உவமைகளாக யாத்தனர். 1, 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/124&oldid=743241" இலிருந்து மீள்விக்கப்பட்டது