பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற இன் நான் கில் ஒன்ருே பலவோ ந னி பொருந்துமெனின், அப்பொருள் எதுவாயினும் அதனை யுவமையாக்கினர். செருப்பிடைச் சிறுபரலே மாற்ருர் படைக்கு இடையூறுபடுக்கும் மறவனுக்கும் (257) எலியின் செவிக்கு கோங்கம் பூவின் கொட்டையும் (321) ஊகம் பூவிற்கு அணில் வாலும் (307) உவமைப் பொருள்களாகின்றன. எறும்பு முதல் யானையிருக உள்ள அனைத்து அஃறிணைப் பொருள்களேயும் உவமையாக்கி யுள்ளனர். புலி, யானை, பகடு இவை அடிக் கடி புறநானூற்றில் உவமைகளாக வருகின்றன. சாதாரண மக்களாகிய உழவர், உமணர், தச்சர், கொல்லர், இழிசினர் ஆகியோன் தொழில் தொடர்பான உவமைகளேயும் நாம் காண்கிருேம். அரசர்களே நீண்ட காலம் வாழ்க என வாழ்த்தும்போது, என்றும் நிலைத்து வாழும் ஞாயிறு, திங்கள் இவற்றை உவமித்தனர். மற்றும் விண்மீன், ஆற்று மணல், மழைத்துளி இவற்றினும் மிகுதியாக வாழ்கவெனவும் அரசர்களே வாழ்த்தினர். பெரும்பாலும் பன்மைப் பொருள்களே ச் சுட்டு கையிலும் விண்மீனை உவமித்தனர். பல உண்கலங்களேக் குறிக்குமிடத்து விண் மீனே உவமையாகக் கூறினர். அரசர்களுடைய ஆற்றலேயும் அருங்குணங்களேயும் குறிக்கும் போது ஞாயிறு, திங்கள், வான், வளி, தீ ஆகிய ஐம் பூதங்களின் இயல்புகளை உவமையாக இயம்பினர். அரசர் மக்களேக் காத்தற்கு, தாய் குழந்தையைப் பேணுதலேக் கூறினர் அரசன் செவ்வி யுடைமைக்கும், அவன் கடமை தவருது கைமாறு கருதாது ஈதற்கும் மக்களைக் காத்தோம்புதற்கும் மாரியை உவமையாக் கூறினர். புலவர்கள், புரவலரை நாடிச் செல்வதற்குக் கடலே நாடிச் செல்லும் ஆற்றையும், பழ மரம் தேடிச் செல்லும் பறவையையும் உவமைப்படுத்தினர். மகளிர் அழகு, பொலிவு, நலம், பெட்பு இவற்றைச் சுட்டுகையில் வள நகர்களைத் தலைநகர்களே உவமையாகக் கூறியுள்ளனர். இத்தகைய உவமைகள் புற.நா னுாற்றில் மீண்டும் மீண்டும் காணப்படுவது கருதத்தகும். துண் பொருளான அறம், தாய்மை மேற்கோள் வாழ்க்கை உயிர் 118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/126&oldid=743243" இலிருந்து மீள்விக்கப்பட்டது