பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடம்பை நாடுதல் ஆகியவற்றையும் உவமித்துள்ளனர். சில புராண உவமைகளையும் (23, 41, 174, 378), சில வரலாற்று உவமைகளே யும் ( 170, 174, 223 , 201) புறநானூற்றில் காண லாம். புறநானூற்றில் இருநூற்று எண்பதுக்கும் குறையாத உவமைகள் உள. உவமைப் புலவர்கள் புறநானூற்றில் இத்தகு சிறந்த உவமைகளைப் பலப் புலவர் கள் கையாண்டுள்ளனர். மிகத் தேர்ந்த உவமைகளே அடிக்கடி ஆளும் புலவர்கள்: கபிலர் , பரணர், ஒளவையார், கோவூர் கிழார், முடமோசியார், மருதனிள நாகனர், பெருஞ்சித்திரர்ை. முதலியோர். அவர் இவரன்னேர் கருத்தையும் கற்பனையையுமே தமது பாடலுக்கு உயிராகக் கொண்டனர். எதுகை க்கும், மோனே க்கும் சிறப்பளிக்க வில்லே. அவற்றை உடம்பாகக் கொண்டனர். இது சங்கப்புலவர்களின் தனி இயல்பு. முடிவுரை புறநானூற்றில் நானில இயற்கை வருணனைகளேயும் அழகிய வகையில் அவ்வப்போது காணலாம். சிலபோது புறப்பாட்டில் இயற்கை வருணனைகளிலேயே தொனிப் பொருளும் (23,200) அடைமொழிகளிற் குறிப்பு மொழிகளும்(202, 209) காணுதல் கூடும். புறப்பாடல்களில் தெளிந்த அகவலோசையும், அள பெடை களும், எச்சங்களும் மிகுதி எனலாம். வஞ்சிச் சீரும் அடியும் காணப்படுகின்றன. இத்தகைய பாடல் புறநானூற்றில் எண்ணிக் கையில் எட்டில் ஒரு பங்கு எனலாம். நேரிசை ஆசிரியப்பாக்களே மிகுதி (332). இணைக்குறளாசிரியப்பா அருகி வருகின்றன. (95, 125, 235, etc). நிலே மண்டில ஆசிரியப்பா காணப்படுகின்றது (13). அடிமறி மண்டில ஆசிரியப்பா புறநானூற்றில் ஐந்து சீர் கொண்ட அடிகளையும் மிகச் சிறுபான்மையாகக் காணலாம் (10, 109,201, 214. 225 etc). இவற்றில் வகையுளி” இல்லை. இப்பாடல்களின் நடைப்போக்கு, மற்ற சங்கப்பாடல்களே நோக்க மெத்த கடின மாகவோ எளிதாகவோ இல்லாது நடு வனதாக உள்ளது. ஆதலின் புலவர்கள் தம் பொருளுக்கு ஏற்ப நடையை அமைத்துக் கொண்டனர் எனக் கருதலாம். 1 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/127&oldid=743244" இலிருந்து மீள்விக்கப்பட்டது