பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலப் பாண் டியர்கள் வெ. இந்திரா சுப்புலட்சுமி பாத்திமா மகளிர் கல்லூரி, மதுரை சங்ககாலப் பாண்டியர் களேப் பற்றி எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, ஆகிய நூல்களிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியவற்றைப் பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்க மாகும். சேரர்களேக் குறித்துப் பதிற்றுப் பத்து விரிவாகக் கூறுவது போன்று பாண்டியர்களேக் குறித்தோ அல்லது சோழர்களே க் குறித்தோ அறிந்து கொள்ளத் தனி இலக்கியம் இல்லே. புற இலக்கியமாகிய புறநானூறும் அக இலக்கியங்கள் பிறவும் இவர்களேக் குறித்து அறிந்துகொள்ளத் துணை செய்கின்றன. இந்த அரசனுக்குப் பின் இந்த ஆண்டில் இந்த அரசன் ஆண்டான் என்று வரலாற்றுச் சான்று காட்டி அறுதியிட்டுக் கூற இயலாவிடினும், புற நூல்களின் துனே கொண்டு இவனுக்குப் பின் இவன் ஆண்டிருக்கலாம் என்று உய்த்துணரலாம். இலக்கி யங்கள் (சங்கம்) கூறும் வரலாற்று நிகழ்ச்சிகள் உண்மையாக நடந்தனவே என ஏற்றுக்கொள்ளுவதற்கு கல்வெட்டா ராய்ச்சி உறுதுணையாக நிற்கின்றது. பதிற்றுப்பத்து வைப்பு முறை யாவர்க்கும் தெரிந்த ஒன்று. அதில் கிடைக் காத முதற்பத்தின் பாட்டுடைத் தலே வகை, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் பேசப்படுகிறன். இச் சேர அரசனே, புறநானுாற்றிலும் முதலாவதாகப் பேசப்படுகிறன். புறநானூறு இரண்டாம் பாடலில் முரஞ்சியூர் முடி நாகராயர் 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/128&oldid=743245" இலிருந்து மீள்விக்கப்பட்டது