பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கி, நிலம் பெயரினும், சொற்பெயரா திருத்தல் வேண்டும் என்றும், அவனை நாடிப் புலவர் வருவதற்குக் காரணம் அவனிடம் இன் மை தீர்க்கும் வன்மை இருக்கின்ற உண்மை யானே யாகும் என்றும் உரைத்துள்ளார். இவன் கவுரியர் வழித் தோன்ற லென்றும் சிறப்பித்துள்ளார். புறநானூற்றின் வைப்பு முறையின் படி, அடுத்த பாண்டிய அரசனக சிறப்பித்துப் பாடப்படுகின்றவன் பாண்டியன் பல் யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் ஆவான். அவனே ப் பாடிய புலவர்கள் காரி கிழார் (6), நெட் டிமையார் (9, 12, 15), நெடும்பல்லியத் தர்ை (64), ஆகியோர் ஆவார்கள். காரி கிழார் தம் பாடலில் இப் பாண்டியனே க் குறித்து இவன் யாக சாலைகள் பல நிறுவி யாகங்கள் செய்துள்ளவன் எனப் பாராட்டியுள்ளார் . அதன் காரணமாகவே அவனுக்குப் :பல் யாகசாலை’ என்ற அடை மொழி கொடுக் கப்பட்டுள்ளது. நெட்டிமையார் பாடிய பாடலில் அவர் அரசனே வாழ்த்தும் பொழுது முந்நீர் விழவின் நெடியோன், நன் னிர்ப் பஃறுளி மன லினும் பலவே என்று வாழ்த்தியுள்ளார். இவ்வரசன் பஃறுளி யாறு கடலால் கொள்ளப்படு முன்பு இருந்திருத்தல் வேண்டு மென்று இதனுல் கருதப்படுகின்றது. மேலும் இப்பாடல் மூன் ரும் சங்க காலத்தில் தொகுக் கப்பட்ட எட்டுத்தொகை பத்துப் பாட்டு நூல்களுக்கு முன்பே இயற்றப் பெற்றிருக்க வேண்டும் என்றும் எண்ணப்படுகின்றது இப் பஃறுளியாறு பல்யா கசாலே முதுகுடுமிப்பெருவழுதியின் முன் ைேனை நெடியோன் என்பவன் தொடர்பாகப் பேசப்படுகிறதே அல்லாது பல் யாக சாலே முது குடுமிப் பெருவழுதி காலத்ததாகப் பேசப்படவில்லே நெடியோன் காலத்திலிருந்து பஃறுளியாற்றின் மணலேக் காட்டிலும் அவன் நெடு நாட்கள் வாழ வேண்டும் எனப் புலவர் வாழ்த்து கின் ருர். முதுகுடுமி ஆண்ட காலத்தில் அவ்யாறு இருந்ததாகக் கொள்வதைவிட இவ்வாறு கொள்வது சிறப்புடைத்தாகும். இப் புலவரே மற்றுமொரு பாடலில் இவன் வேள்வி செய்த சிறப்பைப் பின் வருமாறு கூறுகிரு.ர். நற்பனுவ ல்ைவேதத்து அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை 1 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/130&oldid=743248" இலிருந்து மீள்விக்கப்பட்டது