பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண் வியாச் சிறப்பின் வேள்வி முற்றி |Լ b Կ I நட்ட வியன் களம் ” (புறநா. 15) அவனது வெற்றிச் சிறப்பு, ஈகைச் சிறப்பு, ஆகிய யாவும் இவரால் சிறப்பிக் கப்பட்டுள்ளன. அடுத்த பாண்டிய அரசன், த லேயாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் ஆவான். அவனே அகத்திலும், புறத் திலும் பாடிய புலவர்களின் எண்ணிக்கை பதினெட்டாகும். அவனும் சிறந்த புலவன வான். அவனுக்குக் கொடுக் கப்பட்ட அடைமொழியின் சிறப்பினை யாவரும் உணர்வர். அதைத் குறித்து இங்கே விளக்கத் தேவையில்லே என எண்ணுகிறேன். அவன் இருபெரு வேந்தரையும் எழு வேளிரையும் ஆலங்கானம் என்ற இடத்தில் பொருது களத்திட்டவன் என்பது நக்கீரர் அகப்பாட லால் புலகுைம். இவன் இளமைப் பருவத்திலேயே அப்போரில் இவர்களே வெற்றி கண்டவன். இப் பேராற்றலேப்பலர் புகழ்ந்து பாடியுள்ளனர். இங்கு, கல்வெட்டுச் சான்று ஒன்றினே எடுத்துக் கூறுவது ஏற் புடைத்து எனக் கருதுகிறேன். பாண்டியன் நெடுஞ்செழியனே குறித்து அழகர் கோயில் அருகே உள்ள மாங்குளம் என்ற பகுதி யில் கல்வெட்டொன்றுள்ளது. அதனைக் கல்வெட்டாராய்ச்சி யாளர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் விளக்கியுள்ளார். அதில் நெடுஞ்செழியன்... கொடுப்பித்த பாழி’ என வருகிறது. அவ்வாராய்ச்சியாளர் அக் கல்வெட்டின் காலம் கி. மு. இரண்டு அல்லது முதல் நூற்ருண்டாக இருக்க வேண்டுமென்க் கணித் துள்ளார். இதனுடன் மற்றுமொரு கல்வெட்டுச் சான்றைக் குறிப் பிடுவது தக்கது. அது சேர அரசர்களைப் பற்றியதாகும். கரூர் அருகே உள்ள புகளுர் என்ற இடத்தில் காணப்படுவதாகும். அதில் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ள சேர அரசர்களில் இரும் பொறை மரபினரைச் சார்ந்த அரசர்களைப் பற்றியதாகும் அக் கல்வெட்டின் காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டாகும். பொறையின் மரபில் வந்த மூன்று அரசர்கள் அதில் குறிப்பட்டுள் ளனர். அவர்கள் முறையே செல்வக் கடுங்கோ வாழியாதன், அவன் மகன் பெருஞ்சேரலிரும்பொறை, அவன் மகன் இளஞ் 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/131&oldid=743249" இலிருந்து மீள்விக்கப்பட்டது