பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரிநாதர்-இலக்கியத்திறன் او « « را ا)1( ، திரு. தி. இரவீந்திரன் அண்ணுமலேப்பல்கலைக்கழகம் உள்ளத்தினையும் உடலினையும் செம்மைப்படுத்துவதாய்க் கருத்துக்களுக்கு விளக்கமும் வடிவமும் தந்து தானே நிலைத்த இன்பம் தருவதாய் உணர்ச்சி ததும்பத் தோன்றுவது விழுமிய இலக்கியக் கலையாகும். இலக்கியக் கலையின் உயிர்நாடி அதனு டைய வடிவம் ஆகும். புலவரின் சொல்லாட்சி, ஒலிநயம், நடை, யாப்பு, கற்பனை, உணர்ச்சி முதலியன எல்லாம் ஒரு முகமாய் இயங்கி முழுமை பெறுதலே வடிவம் என்று கூறப்படும். இலக்கியக் கலையின் உயிர்நாடி அதனுடைய வடிவமாதலின் திருப்புகழின் வடிவத்தினை ஆய்வது அதன் இலக்கியத்திறனே ஆய்வதாகும். சொல்லாட்சி மலர்களின் மணத்தால் மலர்மாலே மணம் பெறுவதுபோல் சொற்களின் சிறப்பால் இலக்கியக்கலே உயர்நிலை அடைகிறது. அருணகிரிநாதர் பலபொருள்பட ஒரு சொல்லேக் கூறுவதி லும் ஒரு பொருள்பட பல சொற்களைக் கூறுவதிலும் வல்லவர். மயில் பெற்ற மயில் வாகனன் (1140) என்று கூறுமிடத்து மயில் எனும் சொல் உமையினையும், முருகனையும் குறிக்கின்றது. சேயே வேளே பூவே கோவே தேவே (630) என்று கூறுமிடத்து எல்லா சொற்களும் முருகனேயே குறிப்பிடுகின்றன. அவருடைய பாடல் களில் சில சொற்கள் வடிவம் மாறிக் காணப்படுகின்றன. அவர் சில பாடல்களில் சொற்பொருள் விளக்கம் கூறிப் பின்னர் அதற் 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/135&oldid=743253" இலிருந்து மீள்விக்கப்பட்டது