பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெகுளி தமது குடியினரால் வாழ்கின்ற தேவர்கட்கு அரக்கர்கள் விளைவித்த தீமைகளைக் கண்ட முருகப்பெருமான் வெகுண்டு அவர்களை அழித்துத் தேவர்கட்கு நல்வாழ்வு அளித்தான் (100). £2_6) I 60) of பொற்காசுகளைப் பார்த்து உள்ளம் உவகை கொண்டு வாழ்க்கை நடாத்தும் நாடகக் கணிகையரின் புன்கண் தரும் புணர்ச்சியை விரும்பி, உயிரானது புண்பட்டு உள்ளம் உருகி அவர்கட்கு ஆளாகின்ற காமம் ஒழிதல் வேண்டும் (1181). திருப்புகழாம் பாமாலை இலக்கியக் கலையாம் சேயோனுக் குப் புகழ்மாலையாக அமைந்து அழக னுக்கு அழகு செய்கிறது. திருப்புகழ் வாழ்க்கையின் விளக்க இலக்கியமாகவும் வாழ்க்கை யில் ஏற்படும் சிக்கல்களே நீக்கி வாழ்க்கையினைச் செம்மைப் படுத்த உதவுமோர் வழிகாட்டி இலக்கியமாகவும் உள்ளத்திற்கும் உடலுக்கும் உறுகண் தீர்க்குமோர் மருத்துவ இலக்கியமாகவும் இவ்வுலகிடைத் திகழ்கிறது. 134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/142&oldid=743261" இலிருந்து மீள்விக்கப்பட்டது