பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0.1. சங்க இலக்கியத்துள் விரவிக்கிடக்கும் வானியல் செய் திகளுள் ஒரு செய்தி கொடுமுடி போன்ற தனித்தன்மை வாய்ந் தது. சேரமன்னன் ஒருவனின் சாவைக் கோள், நாள், கிழமை, மாதத்தோடு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பாட்டு, குறிப்பிடும் நாட் குறிப்பைத் தெளிவாக க் கணித்து விடுவோமே யாகுல் அம்மன் னன் இறந்த மாதம், நாளைத் துல்லியமாகக் கனக் கிட்டுவிட முடியும். அதன் மூலமாகப் பதிற்றுப் பத்தின் காலம் சேர வேந்தனின் காலம், சங்க இலக்கியக் காலம் ஆகிய வற்றையும் வரையறுத்துவிட முடியும் எனினும், இப்பாட்டு குறிப்பிடும் காலக் குறிப்பைக் கணிக்க அறிஞர்கள் முயன்றிருக் கிருர்கள். இக்கட்டுரை அச்செய்யுள் காட்டும் காலத்தை அறிவியல் அடிப்படையில் கணிக்க முயலுகிறது. சேரர் குல மாந்தரஞ் சேரல் 1. 0. மேலே குறித்த செய்யுள் புறநானூற்றில் 229-ஆம் செய்யு ளாக இடம் பெற்றுள்ளது. இச் செய்யுளேப் பாடினவர் கூடலூர் கிழார். இவரால் பாடப் பெற்ற அாச ன் , கே ச் சேர ம | ன்ய னே க் கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை இவன் குடக்கோ நெடுஞ்சேரல் இரும்பொறை வழியில் வந்த வன். சேய் என்பது இவனது இயற்பெயர், தனது சிறு கண்ணே க் கொண்டு பருவுடலைத் தாங்கி நெறியறிந்து இயங்கும் யானே யைப் போல, சிறு முயற்சி செய்து பெரும் பயன் விளேத்துக் கொள்ளும் சிறப்புடைய வன் இ வன் 'வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்' என வரும் புறப்பாட்டடி (புறம். 22) இக் கருத் தை உறுதிப்படுத்துகிறது . இவன் மாந்தரன் குடி யோடு தெடர்பு ைடயவன். கேரள நாட்டு ஆனை முடிப்பகுதியில் 'ஆனக் கஞ்சிரு” எனும் பகுதி உள்ளது. இது ஆ&னக் கண் சிறை என்பதன் திரி பாகும். மலேயாள வள ளு வ நாட்டு வட்டத்தைச் சார்ந்த பகுதி ஆ&ன க் கண் குன் னுர்’ என்று இன்று அழைக்கப்படுகிறது. 'யா ஆனக் கண் குன்று என்பதன் திரியே அது. இவ்விரண்டு பகுதிக்கும் இடைப்பட்ட நாடே “பொறை நாடு’ என வழங்கப் பட்டது. இந்நாட்டின் தலைநகரம் தொண்டி. இத்தலே நகரில் இருந்து கொண்டே, பொறை நாட்டை ஆண்டு வந்தான் இரும் பொறை வேந்தன். 136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/144&oldid=743263" இலிருந்து மீள்விக்கப்பட்டது