பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரமகேது தோன்றிய நாள் 25-3-141 என்றறியப்படுகிறது. இதனையடுத்த ஏழாம் நாளில் சேரன் மடிந்தான் எனப்புலவர் குறிப்பிடுகின்ருர் . இக் குறிப்பின்படி, சேரன் யானே க் கண் சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்த நாள் 31-3-141 ஆக இருத்தல் வேண்டும். 5.0. இச்சேரமன்னரே மறைந்து போன பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவகை இருத்தல் வேண்டும் என்று கூறுகிருர் அறிஞர் சேஷ அய்யர். (Cera Kings of the Sangam Period). ஆதலின் பதிற்றுப் பத்தாம் பகுதியின் காலமும் கி. பி. 141ஐ ஒட்டியிருத்தல் வேண்டும் என்று ஊகிக்கலாம். 6.0. அண்மையில் புகளுரில் கிடைத்த கல்வெட்டுக் களை ஆராய்ந்த அறிஞர்கள் அக் கல்வெட்டின் காலம், கல்வெட்டுக் காட்டும் சேர பரம்பரையின் காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண் டாகவே இருத்தல் வேண்டும் என்று முடித்திருக்கும் முடிவும், மேற்கண்ட வானியல் முடிபோடு இணங்கி இருப்பதும் நினேக் கத் தகுந்தது. 142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/150&oldid=743270" இலிருந்து மீள்விக்கப்பட்டது