பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போப்பையரும் நாலடியாரும் திரு சா. தே. கிறிஸ்டோபர் போப் கல்லூரி, சாயர்புரம் பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் தமிழரிற் பெரும்பாலோர் தம் மொழியைப் புறக் கணித்துப் பிறமொழி ஆர்வலராய்த் தமிழிலக்கியங்களைப் படியாது ஒதுக்கிய காலம். ஐரோப்பியர் தமிழிலக்கியங்களைக் கற்றுத் தமிழ்ச் சமுதாயத்தின் மாண்புகளையும் சிந்தனைகளேயும் புரிந்துகொள்ள வேண்டும்; ஐரோப்பியர் அவரது இலக்கியங்களேக் கற்கும் ஆய்வு முறைப் படித் தமிழ் இளைஞர்களும் தமிழிலக்கியங்களேப் படிக்கத் துாண்ட வேண்டும் என்ற உயரிய நோக்கொடு டாக்டர் ஜி. யூ. போப்பையரவர்கள் தமிழிலக்கியங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணியை மேற்கொண்டார். திருக்குறளே மொழிபெயர்த்து வெளியிட்ட ஏழாண்டுகளுக்குப் பின் 1893-இல் நாலடியார் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலே ஐயரவர்கள் வையத்துக்கு வழங்கினர். உரைத் திறன் தமக்குக் கிடைத்த பழைய பல தமிழுரைகளின் உதவியால் நாலடியாரை நன்கு ஒதியுணர்ந்த ஐயரவர்கள் பழைய உரை களுடன் மாறுபட்டுப் பொருள் கண்ட இடங்கள் பல. இதல்ை நாலடி வெண்பாக்கள் சுடச் சுட ஒளிரும் பொன் போல் மேலும் விளக்கமடைகின்றன. மாறுபட்ட உரைகளே நயமாக மறுப்பது ஐயரவர்கள் சால்பு. 1. உாை வித்த்கம் எழுவார்’ (315) என்பதற்குத் தமது உரை வல்லமையைப் புலப்படுத்த முற்படும் நற்புலவர் என்பது 143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/151&oldid=743271" இலிருந்து மீள்விக்கப்பட்டது