பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Frown, and we smile the lords of our own hands. For man, is man and master of his fate”.-Tennyson. 2. தண்டாச் சிறப்பிற்றம் இன்னுயிரைத் தாங்காது, கண்டுழி எல்லாம் துறப்பவோ? (62) Hamlet’s question, “To be or not to be?. 3. முதியவர், வீட்டு வேலேக்காரியாலும் இகழப்படுவர் (326) என்பதோடு “An old man is a troublesome thing in a house’— Menander கூறியதை ஒப்பு நோக்குகின் ருர் . (4) அலவனே த்தின்றவர் விரலழுகித் தொழுநோயால் துன்புறுவர் (123) என்பதோடு இத்தாலியப் புலவன் தாந்தே (1):Inte) சித்தரிக்கும் மேல்போஜ் (Malepoge) என்ற நிரயத்தின் எட்டாம் வளாகத் தைத் தொடர்பு படுத்துவர். 'உளநாள் சில உயிர்க்கு ஏமம் இன்று; பழிவே று; எனவே ஏன் கண்டா ரொடெல்லாம் பகை ?’ (324) என்று தமிழ்ப்புலவன் எண்ணி ய தைப் போலத் தாந்தே படைத்த கவிமாந்தர் நிரயத்திலே கழறுவதை எடுத்துக் காட்டுவர். (5) கொலேஞர் உலே ஏற்றித் தீ மடுப்ப ஆமை நிலையறி யாது அந்நீரிற் படிந்தாடும் உவமை (331) கிரேக்க இலக்கியங் களிற் பெரு வரவிற்று என்பர். சிந்தனே க் கருத்துக்கள் அனைத் தும் உலகத்துக்குப் பொதுச் சொத்து. அவை நிறம், மொழி காலம், தேயம் என்ற வேறுபாடு கடந்தவை என்பதே போப்பையர் கருத்து (203). தமிழுக்கு வணக்கம் ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு மூல நூலிலுள்ள சொற்கள் எல்லாவற்றிற்கும் ஈடான சொற்களேத் தன் மொழியிற் காண்டல் அருமையும் மிகவும் சிரமமுமான வேலேயாகும். நாலடியாரின் மொழியாக்கத்தில் பொருத்தமான ஆங்கிலச் சொற்களைப் பெய்ய 147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/155&oldid=743275" இலிருந்து மீள்விக்கப்பட்டது