பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் அஞ்ச வேண்டா. மூலகங்களுக்கு (Elements) இரசாயனத் தில் வழங்கும் குறியீட்டுச் சொற்களே அப்படியே ஏற்போம். செம்பு ... ... CU தங்கம் ... ... AU வெள்ளி ... ... Ag இரும்பு ... ... Fe FFц и LD. Hi-Ho # = H Pb இக் குறியீட்டுச் சொற்களே யாரும் தமிழாக்கம் செய்யப் போவ தில்லே. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் 1965ல் தமிழில் முடியும்’ என்ற தலைப்பில் வெளியிட்ட நூல் பல்வேறு பாடத் துறையைச் சார்ந்த பேராசிரியர் எண்மர் எழுதிய கட்டுரை களேக் கொண்டு விளங்குகின்றது. அதைத் தமிழா ? பயிற்சி மொழியா? என்று அலுத்துக் கொள்பவர் அனைவரும் ஒருமுறை கற்றுணர வேண்டும். தமிழ் பயிற்சி மொழியாக வேண்டும் என் போருக்கு அந்நூல் சுவைக்கும் தேன்; இனிக்கும் பாகு; தித் திக்கும் கனிச் சுவை. அந்நூலில் பாளையங்கோட்டை தனிக் கல்லூரி முதல்வர் உயர்திரு வானமாமலே அவர்கள் இரசாயனம்’ ’ என்ற தலைப் பில் எழுதிய கட்டுரையில் சில பகுதிகள் பின் வருமாறு: 'மூலகங்களின் பெயர்கள், கூட்டுப் பொருள்களின் பெயர்கள் (H.O போன்றவை) இரசாயன சமன்பாடுகள் ஆகியவை எல்லா மொழிகளுக்கும் பொதுவான வை. இவையெல்லாம் தமிழ் அல்ல என் ருல் இவை ஆங்கிலமும் அல்ல. வேறெந்த நாட்டு மொழியும் அல்ல என்பதை உணர வேண்டும் இவை அறிவை வெளியிடப் பயன் படுத்தும் சங்கேதக் குறியீடுகளே ஒவ்வொரு விஞ்ஞா னத்திற்கும் அதற்கெனச் சிறப்பான சங்கேதக் குறியீடுகள் உண்டு. அவற்றைக் கற்றுக் கொள்ளாமல் அவ் விஞ்ஞானத்தில் புலமை பெற முடியாது. எனவே, எல்லா மொழிகளுக்கும் பொது வானவற்றைத் தமிழில் இரசாயனம் கற்கும் மாணவனும் கற்றுத் தான் ஆகவேண்டும்”. (தமிழில் முடியும் பக்கம் 120) 152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/160&oldid=743281" இலிருந்து மீள்விக்கப்பட்டது