பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவில்லை என்பது தெளிவு. ஆகவே மனத்தால் உணரத்தக்க இதனை நம் ஆன்ருேர்கள் விளக்க முன் வரவில்லே. ஆல்ை கற்பனை என்ற சொல்லுக்குத் தமிழில் வரையறை இல்லே என்பதால் கற்பனேயே இல்லே என்று சொல்லிவிட முடியாது. ரிச்சர்ட்ஸ் என் பார் உவமை உருவகம் முதலியவற்ருல் பொருள்களே உற வாக்கிக் காணுதல் கற்பனை’ என்பதன் மூலம் உவமை, உருவகம் முதலியன கற்பனை க்கு உதவும் பெரும் கருவியாகக் கொள்வது தெளிவு. கூர்ந்து நோக்கினல் மேட்ைடார் கற்பனைப் பிரிவுகள் அனைத்தும் தமிழ் இலக்கணங்கள் பகரும் அணிகளுடன் ஒத்து நடப்பன வாய் உள்ளன. இனி முதலாவதாக ச் சிலம்பில் வரும் வெறுங்கற்பனையினைக் காணலாம். கால்கோட் காதையில் செங்குட்டுவன் கண்ணகிக் குக் கல்லெடுக்க இமயம் செல்லவேண்டும் என்றதும், வீரர்கள் வலிய நிலவுலகினைச் சுமந்திருக்கும் ஆதிசேடகிைய பாம்பில் தலையும் நடுங்குமாறு ஆரவாரத்துடன் எழுந்தனர் என்று இளங் கோவடிகள் கற்பனை செய்கின் ருர், ' உரவுமண் சுமந்த அரவுத்தலே பனிப்பப் பொருநர் ஆர்ப்பொடு முரசெழுந்து ஒலிப்ப” (34 : 35) இனி, சிறந்த கற்பனையைத் தனியே கானுவதை விடக் கருத்து விளக்கக் கற்பனையில் நன்கு காணலாம். இப்பொழுது சிறந்த கற்பனைப்பிரிவுகளே முறையாக ஆராய்வோம். ஒர்ட்சுவர்த் என்பார் கூறும் ஆக்கக் கற்பனையை அதாவது புறத்தோற்றத்தில் ஈடுபடாமல், அகத்தை ஊடுருவி உட்கருத் தைப் புலப்படுத்தும் கற்பனையை, மாதவி பாடும் ஆற்றுவரிப் பகுதியான கானல்வரிப் பாடலில் காணலாம்.

  • வாழி அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ’’ இங்குக் காவிரியின் புறத்தோற்றத்தில் ஈடுபடாமல் - அதாவது அதில் மிதந்து வரும் மலர், வீழும் தேன் முதலியவற்றைப் பாடா மல், அது இளங்குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும் தாய் போல் பசிய பயிர்களே நீர் ஊட்டி வளர்ப்பதைக் கூறுவதால் காவிரி 156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/164&oldid=743285" இலிருந்து மீள்விக்கப்பட்டது