பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைத்துக் காணுதல் என்ற பிரிவைப் பின் வரும் இயைபுக் கற்பனையில் காணலாம். வாழ்க்கையில் அனுபவத்தை வெவ் வேறு வகையில் அமைத்தும் காணுதல் என்ற பிரிவில் கோவலன் உயர்நிலையும் தாழ்ந்த நிலையும் நன்கு படம் பிடித்துக் காட்டப் பட்டுள்ளதைக் காணுமாற்ருல் அறியலாம். பொருள்களே உள்ள வாறே உணரும் பொழுது மாறுபட்ட பொருள்களே நிறுத்துக் காணுதல் என்ற பிரிவில் கோவலன் சிலம்பு விற்றுவரப் போகு முன் கண்ணகியிடம் அது பற்றிக் கூறும் பொழுது மாறி வருவன்’ என்று கூறுகிருன். அதாவது சிலம்பினே விலேக்கு விற்று வருவேன் என்பது அதனை உள்ளவாறே உணரும் பொருளாகும். ஆனல் அங்கே மாறி என்று சொன்னல் விற்று என்பது மட்டும் பொரு ளன்றி உயிரோடு போன அவன் உயிரற்ருேகை மாறி இருப்பான் என்றும் பொருள்படும். ஆகவே இப்படி மாறுபட்ட பொருளே நிறுத்திக் காணுதலே இங்குக் காணலாம். மேலே நாட்டுத் திறனு ய்வாளர் சி. டி. வின் செஸ் டர் கற்பனை யைப் பிரித்தபடி இனி ஆராய்வோம். மனேயறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியைப் பாராட்டும் பகுதியில் படைப்புக் கற்பனை பொருந்தி உள்ளது. அடுத்து இயைபுக் கற்பனேயைக் காணலாம். மங்கல வாழ்த்துப் பாடலில் முதற்பாடலே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளது. சோழனின் அருள் மிக்க குளிர்ச்சி யை யு டைய வெண் கொற்றக் குடை போன்று திங்களும் தண்ணுெளி பரப்புவதால் திங்க ளேப் போற்றுவோம் என்ற பொருள் கொண்டு விளங்குகிறது. இங்கே சோழனின் வெண் கொற்றக் குடை தண்ணியதாய் மக்களுக்கு இருப்பது போன்று திங்களும் இரவில் தண்ணிய ஒளி வீசி இன் புறுத்தல் இயைபு படுத்திக் கூறப்பட்டுள்ளது. இங்கு உவமைப் பொருளாகச் சோழனின் வெண் கொற்றக் குடையை வைத்தது சிறப் . التي لها حالات 5 يا அடுத்து, கருத்து விளக்கக் கற்பனையைக் காணலாம். நாடு காண் காதையில், கவுந்தியடிகள் கண் ண கியோடு வரும் கோவலனுக்குத் தண்டலே வழியருமைப்பாட்டை, 158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/166&oldid=743287" இலிருந்து மீள்விக்கப்பட்டது