பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொரட்டி சயனைட்டுப் பாறைகளின் பொட்டாசியத்தனிம ஏற்றம் POTASSIC METASOMATISM IN THE SYENITE COMPLEX OF KORATI -டாக்டர் ச. சரவணன் திரு. இரா. இராமசாமி சென்னே வடார்க் காடு மாவட்டத் திருப்பத் துனருக்குத் தெற்கே, ஐந்து மைல் தொலைவில் கொரட்டி என்ற சிற்றுார் உள்ளது. இவ் ஆருக்கு மேற்கே காணப்படும் சயனேட்டுப்பாறைகளிடையே, அவற்றின் கனிமக் கட்டுக் கோப்பு. கணிம இயல்பு, கனிம அடக்கம் கனிம அமைப்பு ஆகியவை மாறுபடுகின்றன. இப்பாறைகளின் கனிம அமைப்பை உற்றுநோக்கும்போது அவற்றில் பொட் டாசியத் தனிம ஏற்றத்தின் சாயல்கள் இருப்பது கண்டுபிடிக் கப் பட்டுள்ளன. நிலத் தொடர்பு, பாறை அமைப்பு, கனி மச் சேர்க் கை ஆகியவற்றை நோக்கியும், பிற ஆய்வாளர்களின் கருத்துக்களே ச் சுட்டியும் இப்பகுதியில் பொட்டாசியத் தனிம ஏற்றம் நிகழ்ந்துள்ளமை விளக்கப்பட்டுள்ளது. இம்மாற்றம் கார்பான டை ட்டுப் பாறைகள் தோன்றும்போது உண்டாகும் காரத் தனிமம் சொரிந்த திரவங்களால் தோன்றி யுள்ளது என்று கருதப்படுகிறது. பாறைகளில் பிளே ஜியோகிளேசுகள் பரவலாக ப்ொட்டாசியம் பெல்சு பாராக மாறியிருப்பதால், கார்பான டைட் டின் ஊடுருவலால் தோன்றிய காரத் தனிம ஏற்றத்தின் (Fenitization) இறுதிக் கட்டத்தில் பொட்டாசியத் தனிம ஏற்றம் நடைபெற்றுள்ளதென ஊகிக் கப்படுகிறது. இப்பகுதிகளில் காணப்படும் பலவகையான சயனேட்டுப் பாறைகளேத் தோற்று விப்பதில் பொட்டாசியத் தனிம ஏற்றம் பெரும்பங்குகொண்டுள்ள தெனக் கருதப்படுகிறது. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/17&oldid=743291" இலிருந்து மீள்விக்கப்பட்டது