பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க அக இலக்கியம் காட்டும் தாய்மை இந்திராணி மணியன் லேடி ரீராம் கல்லூரி, புதுதில்லி 0. அக இலக்கியத்தில் மகட்போக்கிய தாய் சொல்லியது, செவிலி கூற்று, மனைமருட்சி என வரும் பாலேத்தினைத் துறை களும், தோழி, தலைவி கூற்றுக் களாக வரும் சில இடங்களும் தாயின் மனநிலையை விளக்குகின்றன. தலேவியின் இருதரப் பட்ட வாழ்க்கைக் கட்டங்களில் தாய் அறிமுகப்படுத்தப் படுகிருள், ஒன்று தலைவியின் களவுக்காலத்தில்; மற்ருென்று த&லவியின் உடன் போக்கின் பின் முன்னே யதில் தோழி அல்லது தலைவியின் கூற்றில் மூலமாகத் தாயுடன் மறைமுகத் தொடர்பும், பின் அனயதில் தற்கூற்றின் மூலமாக நேரடித்தொடர்பும் ஏற்படு கிறது. கள வுக் காலத்தில் காட்டப்படும் தாயின் மன நிலே, உடன் போக்கின் பின் காணப்படும் தாயின் மனநிலையினின்று முற்றிலும் முரண்பட்டதாக இருக்கின்றது. 1.1. தற்கூற்றின் மூலமாக நாம் கானும் தாய் அன் பின் வடிவமாக விளங்குகிருள்: மணிகள் இழைத்த பொற்கலத்தில் பாலோடு தேன் கலந்து ஊட்டி வளர்க்கின் ருள். (1) ஒரை ஆயமொடு பந்து சிறிது எறிந்து களைத் தாலும் வம்மென அழைத்து என்பாடுண்ட இன ஆயின் ஒரு கால் நுந்தையாடும் உண்ணென்று உண்பித்துக் களைப்பினைப் போக்குகின்ருள். (2) சாந்து உளர் வணர் குரல் வாரி வகைப்படுத்தி மலர் இணைத்து அழகுபடுத்து கிருள். (3) 12. இவ்வாறு பிறந்தது முதல் சிறந்தவை செய்து நலம் பாராட்டுகிருள் அன்னே யாயே கண்ணினும் கடுங்காதலளே 1.65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/173&oldid=743295" இலிருந்து மீள்விக்கப்பட்டது