பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிமேலழகர் உரை: ஒரு திறனுய்வு டாக்டர் இரா. சாரங்கபாணி அழகப்பா கல்லூரி, காரைக்குடி திருக்குறளுக்கும் பரிபாடலுக்கும் பரிமேலழகர் உரை வரைந் திருப்பதாக அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர். பரிபாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகரா என்பதில் சிலர் கருத்து வேறு படுகின்றனர். ஆதலின் ஈண்டுப் பரிபாடல் உரையை விடுத்துத் திருக்குறள் உரையினேயே திறய்ைவுக்கு மேற்கொண்டுள்ளேன். மூல நூலாசிரியர்களுக்கு ஒத்த சிறப்பும் பெருமையும் பரிமேலழகர் உரைக்கு உண்டு. அதல்ைதான் திருக்குறள், திருவாசகம், தொல் காப்பியம், பெரிய புராணம், சிவஞான சித்தி என்னும் ஐந்து நூல்களோடு பரிமேலழகர் உரையையும் வைத் தெண்ணி இவை ஆறும் தண்டமிழின் மேலாம் தரம் என்று ஒரு வெண்பா கூறுகிறது. பரிமேலழகர் பரந்த இலக்கண இலக்கியப் பிறமொழியறிவு, திட்பநுட்பம், குறளனைய செறிவு, முன்பின் குறள் மூலத்தோடு இயைபு படுத் தி உரை வரைதல், சமயப் பொதுமை இன்னே ரன் ன சிறப்புக்களோடு உரை கண்டவர் என் பதில் யாருக்கும் ஐயம் எழாது. எனினும் சில இடங்களில் அவர் கண்ட உரை ஒவ்வாதது போல் தோன்றுகின்றது. அவர் தம் உரையில் கண்ட சில பொருந்தா மையை எடுத்துக் காட்டுவதே இக் கட்டுரை நோக்கம். காட்டுகின்ற பொருந்தாமை பொருத் தந் தான என்று ஆராய்ந்து முடிவு காண்பது அறிஞர் கடன். கட்டுரை காட்டும் பொருந்தாமை பொருந்தா மையாகப் புலப் படின் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது அன் ருே? 184

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/192&oldid=743316" இலிருந்து மீள்விக்கப்பட்டது