பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதுவ்ோர் தம் காலத்தில் மன்பதை சிறப்பாக க் ת כס6-T. கருதிய கருத்துக்களை மூல நூலில் ஏற்றிக் கூறல் பெரும்பாலும் இயல்பாக அமைந்துள்ளது. அவ்வியல்பிற்கேற்பப் பரிமேலழ கரும் தம் காலத்துச் செல்வாக்கிலிருந்த வடநூற் கருத்துக்களேக் குறள் மீதேற்றிச் சில இடங்களிற் கூறியுள்ளார். நூலின் தொடக் கத்தே உரைப்பாயிரத்தில் அறத்திற்கு வரையறை கூறுமிடத்து ', அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக் கியன ஒழிதலுமாம்” என உரைப்பர் . இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துனே. (14) என்னும் குறளில் வரும் இயல்புடைய மூவராவார்’ கிருகத்தின் நீங்கிய பிரமச் சாரி, வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவர் என்று எழுதியுள்ளார். சான்ருேன் எனக் கேட்ட தாய்” (69) என்பதற்குப் பெண்ணியல்பால் தாகை அறியாமையிற் கேட்ட தாய்’ என விளக் கஞ் செய்வர். கடா அவுருவொடு (585) என்பதற்குப் பார்ப்பார், வணிகர் முதலிய ஐயுருத வடிவு என விரிவுரை கூறுவர். இவையெல்லாம் வள்ளுவர் கருத்துக்கு மு. ரன னவை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (972) எனப் பொது அறம் பேசும் திருக்குறளுக்கு உரை காணுங்காலே, குலத்துக்குத் தக்க படி நீதி கூறும் மனுநீதியை உரைகல்லாகக் கொண்டு அறத்திற்கு இலக்கணம் வகுத்தல் ஒவ்வாது. மனத்துக் கண் மாசில தைல் அனைத்தறன் : (34) என்பது போன்ற குறள் கொண்டே இலக் கணம் கூறுதல் ஏற்புடைத்து. இயல்புடைய மூவர்க்கும்’ என் பதற்கும் வருணுச்சிரம முறையில் உரைவரைதல் சிறப்பா காது . தன் மகன் சான் ருேன் எனத் தான் அறிந்திருந்தாலும் அவன் புகழைப் பிறர் வாய்க் கேட்கும் பொழுதுதான், தாய் பெரிதும் மகிழ்வள் ஆதலால் கேட்டதாய் என்ருர் எனக் கொள்வதே தகும். பெண்ணி ன த்தின் மீது அறியாமையை ஏற்றி உரைப்பது Аль т. II Jы . 'கடா வுரு என்ற பகுதிக்கு விளக்கமாக அடுத்த குறளிலே துறந்தார் படிவத்தராகி (586) என ஆசிரியர் கூறி யிருப்பவும் அத&ன ச் சுட்டாது சாதியடிப்படையில் பார்ப்பார் வாரு கனப் பரிமேலழகர் விளக் கந்தருவது சாலாது. 185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/193&oldid=743317" இலிருந்து மீள்விக்கப்பட்டது