பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந் தீமை யாற்றிரிந் தற்று (1000) அற்ருர்க்கொன் ருற்ருதான் செல்வ மிக நலம் பெற்ருள் தமிய ள் மூத் தற்று (1007) நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம் பழுத் தற்று (1008) இக் குறள் நடைகளே நோக்கின் ஆசிரியர் கருத்து நோக்கில் பாடியதாகத் தெரிகின்றதேயன் றித் தொழிலுக்குத் தொழிலும் பொருளுக்குப் பொருளுமாக உ. பெ. பப், T_T உவமேயங்களே அமைத்துப் பாடினதாகத் தெரியவில்லே. இவற்றில் பொருளும் தொழிலும் மாறி வருதல் காண லாம். ஆனல் பரிமேலழகர் பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் (1000) என்ற குறளுக்குத் தொழிலுவம மாதலின் பொருளின் கண் ஒத்த தொழில் வருவித் துரைக் கப்பட்டது எனக் கூறியுள்ளார். 1007, 1008-ஆம் எண்ணுள்ள குறள்களுக்குத் தொழில் வரும்படி உரை வரைந் துள்ளார். ஆனல் 931-ஆம் குறளுக்கு அங்ங் னம் வரையவில்லே. வேண் டற்க வென்றிடினும் சூ தினே வென்றதுாஉம் துாண்டிற் பொன் மீன் விழுங்கி யற்று (931) வென்ற பொருள்தானும் இ ைரயால் மறைந்த துாண்டில் இரும் பினே இ ைரயெனக் கருதி மீன் விழுங் கிற்ைபோலும்’ என்று இக் குறளின் பிற்பகுதிக்கு Ф_ 65) ДГ கூறுவர். பரிமேலழகரின் கருத்துக்கு மாருக இதில் வென்றது (வென்ற பொருள்) விழுங்கியற்று என்று பெயர் தொழிலொடு இயைந்து வரல் காணலாம். எனவே "அங் கனத்துள் உக்க அமிழ் தற்ருல்” என்னும் குறளுக்கும் இங்ங்னமே பெயர் தொழிலொடு இயைந்து வருமாறு பொருள் கொள்ளலாம். கொள்ளின் பரிமேலழகர் கொண்டதுபோலக், கொளல் என்பதை எதிர்மறை வியங்கோள் வினே யாக கொள்ளவேண்டு வதின் று. எனவே, அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக் கிற்றிலர்’ என்று அவர் கூறும் மறுப்பும் மறுப்பாகாமை போதரும். 'நிரம்பிய நூலின் றிக் கோட்டிகொளல்” (401) என்ற விடத்து, அவையின் கண் ஒன்ற&ன ச் சொல்லுதல் என்று பரிமேலழகர் உரைக் தாங்கே, தங் கணத்தர் அல்லார் முன் கோட்டி கொளல்’ (720) என்றவிடத்தும் பொருள் கொள்ளல் இயைபானதாகும். 189

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/197&oldid=743321" இலிருந்து மீள்விக்கப்பட்டது