பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ் இலக்கியத்தில் கயமை திரு. நா. செயராமன் தியாகராசர் கல்லூரி, மதுரை "மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம் கண்டதில்’ என்பது வள்ளுவப் பெருந்த ைகயின் வாய்மை மொழியாகும். மக்களிடையே கயவர்களும் உண்டு என்றும் அவர்களே வேறு பாடு செய்வதரிது என்றும் வியக் கிருர் அவர் அத்தகைய கயவர்கள் வாழ்வில் இடம் பெற்றிருப்பது போன்றே வாழ்விலி ருந்து தோன்றும் வளமான இலக்கியங்களிலும் இடம் பெறுவது இயல்பன்ருே! அவ்வாறு தமிழிலக்கியங்களில் காணப்படும் கயமைகளைக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கம். கயமை பற்றிய இலக்கியக் கொள்கை அறப்பழங்காலத்தே இலக்கியக் கொள்கையை ஆய்ந்த அறிஞர் அரிஸ்டாட்டில் கொடு வினையாளர்கள் பற்றியும் கயமைப் பண்பு பற்றியும் விளக்கியுள்ளார். “குற்றங்களே அப்படியே இலக்கியத்தில் கூறுவது பொருத்தமற்றது. ஆயின் பேரளவில மைந்த கொடுமை, அறிவோடும் ஆற்றலோடும் அமைந்தால் அஃது இலக்கிய ஏற்றம் பெறுகிறது என்பது அன் குர் கருத்தா gth. KAristotle's Theory of Poetry and Fine Arts p 313 – 314). அச்சமும் நாணும் மடனும் பெண்பாற்குரிய என்றும் பெருமையும் உரனும் ஆடுஉமேன’’ என்றும் தலைமக் கட்குரிய பண்புகளை விளக்கும் தொல்காப்பியர் தலைமக்கட்கா காப் பண்பு களையும் கூறுகின் ருர். 190

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/198&oldid=743322" இலிருந்து மீள்விக்கப்பட்டது