பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுதாபப்படுவது போல் பாடுவதும் உண்டே தவிர அவர்களேக் கொடு விஜனயாளர்களாகக் காட்டுவதில்லை. எனவே கயமையை எந்த வடிவத்திலும் இலக்கியத்துள் காட்டுவது சங்கப்பாடலுள் காணப்படவில்லே. பொற் கொல்லன் : முதன் முதலில் காணப்படும் கொடுவினையாளன் பொற் கொல்லனே எனலாம். புலம் பெயர் புதுவகை மதுரைக்கு வாழ்தல் வேண்டி வந்த கோவலனது கையில் உள்ள காற் சிலம்பைக் கண்டதும் தான் முன்பு கரந்து கொண்ட சிலம்பினே நினைவு கூர்ந்த அவன் மேல் அப் பழியைச் சுமத்தத் திட்டமிடு வதும் திறம்பட மன்னனிடம் எடுத்துரைப்பதும் இலக் கண முறையிலிருந்தோன் ஈங்கிவன் கொலேப்படுமகனலன்’ என்று கூறும் ஊர்க்காவர்களேத் தன் சொல் வலேயில் வீழ்த்துவதும் அழகுறத் தீட்டப்பட்டுள்ளன. கொலேக் களக் காதையுள் “பொய்த்தொழில் கொல்லன்” ஆக இருந்து கூற்றத்து தனக வந்து பொய் வினே க் கொல்லணுய் ச் செயல்பட்டுக் கோவலன் கொலேக் குக் காரணமாய் அமையும் பொற்கொல்லன் இன்றுவரை கற்போர் நெஞ்சில் நிலேத்துள்ள கொடுவினையாள வைான். கட்டியங்காரன் சச் சந்த மன்னனிடம் தான் பெற்ற நன்மதிப்பையே மூல த ைமாக்கி வஞ்சகத்தைத் தொடங்குகிருன் கட்டியங்காரன் . மன்னனது மகுடத்தைக் கைக் கொண்ட பின்னர் உயிரையும் க வர் கிருன் . இளவரசன் என்று அறியாத போதும் சீவகன் மேல் பொருமை கொண்டு பகைமை கொள்கிருன் . ஆனிரை கவர்ந்த போதும், யாழி ை ப் போட்டியில் வென்றபோதும், அசனி வேகத்தை யடக்கியபோதும் சீவகன் மேல் ப ைகமை முற்றி இறுதியில் எறி பன்றியினே வீழ்த் தும் போது சீவக சீன உயிருடன் காண் கிருன்; இளவரசன் எனும் உண்மையும் புலனுகிறது; கட்டியங்காரனே ச் சீவக ன் கொன் ருெழிக் கிருன். நற்பண் பின் இருப்பிடமான சீவகனுக்கு எதிரான கயவகை க் கட்டியங் கார&னத் திருத்தக் கத்தேவர் படைக்கின் ருர், (A critical Study of Civakacintamani p 157). 192

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/200&oldid=743325" இலிருந்து மீள்விக்கப்பட்டது